பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் மந்திரி புசாராவதை சிலாங்கூர் சுல்தான் ஏற்க மறுக்கும் சாத்தியம் இருப்பதால் அப்படிப்பட்ட நிலையில் என்ன செய்யப்படும் என்று கேட்டதற்கு பிகேஆர் பிடிகொடுக்காமல் பேசுகிறது.
வெளிநாடு சென்றுள்ள சுல்தான் திரும்பிவரக் காத்திருப்பதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
“அரண்மனை முடிவு செய்யுமுன்னர் நாம் முந்திக்கொள்ளக் கூடாது. சுல்தான் திரும்பி வருவதற்காகக் காத்திருக்க வேண்டும்”, என்று சைபுடின் கூறினார்.
இப்போது ஹங்கேரியில் உள்ள சுல்தான் ஆகஸ்ட் 27-இல் நாடு திரும்புவார்.
சிலாங்கூர் அரண்மனை வான் அசிசா மந்திரி புசார் ஆவதை நிராகரிக்கிறது என்பதைக் “கேள்விப்பட்டதாக” பாஸ் கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் பிகேஆர், சுல்தான் நிராகரிக்கவில்லை என்கிறது.
சுல்தான் அவர்கள் கண்டிப்பாக வான் அவர்களை மாநில மந்திரி புசாராக நியமிப்பார்.
எதற்கு தேவை இல்லா ஆரூடங்கல் ?ஆக்க பொறுத்தவர்ஆற பொறுக்க வேண்டாமோ ?
விட மாட்டேங்கலாடா ……………………
மாநில அரசமைப்பு என்ன சொல்கிறதோ அதையே சுல்தானும் ஏற்றுக்கொள்வார் என்றே நம்புவோம். மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டு பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் மும்மொளியப்பட்டவரை தகுந்த காரணமின்றி சுல்தான் புறக்கணிப்பது ஜனநாயகமல்லவே!!!