நேற்றிரவு எம்ஆர்டி கட்டுமான வேலை நடக்கும் இடமொன்றில் நிகழ்ந்த விபத்தில் மூவர் கொல்லப்பட்டதை அடுத்து எம்ஆர்டி கார்ப்பரேசன் தலைமை செயல் அதிகாரி அஸ்ஹார் அப்துல் ஹமிட், பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இன்று சுங்கை பூலோவில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் இதனை அறிவித்தார்.
எம்ஆர்டி டமன்சாரா நிலையம் கட்டப்படும் இடத்தில் 650 டன் காங்கிரீட் பாளங்கள் விழுந்தில் மூன்று வங்காள தேசத் தொழிலாளர்கள் இறந்தனர்.
அஸ்ஹார் இதற்குமுன் சைம் டார்பி நிர்வாக இயக்குனராக இருந்தார்.
நம்ப முடியவில்லை! இது கனவா! நனவா! இருந்தாலும் உங்களுடைய துணிச்சலுக்கு எனது பாராட்டுக்கள்!
இவர் மனிதன்……
மேலிடத்து வற்புறுத்தலில் பதவி விலகினார் என்று சொல்லுங்கள். தானே தார்மீக பொறுப்பேற்று பதவி விலகவில்லை என்பதை அறிவீராக!.
இது காலீட் ஆட்சி,எப்போதும் ஞாயமே நடக்கும்.வாழ்க நாராயண நாமம்.
எது எப்படியோ தவறு நடந்து விட்டது பதவி விலகுகுறார் நல்லது,அந்த முவருக்கும் இழப்பிடு கிடைக்குமா?கிடைக்காதா?எம் ஆர் டீ பதில் சொல்ல கடமை பட்டுள்ளது.
நீதான்யா மனுஷன். சோற்றுலே உப்பு போட்டு சாபிடுறவன்.
3 உயிர்களுக்காக பதவி விலகுகிறாய்.
பல உயிகளை பலி கொடுத்தும், இன்னும் பதவியில் இருப்பவர்களை என்னவென்று சொல்வது ? உன் காலை கழுவி அந்த தண்ணீரை குடித்தாலாவது, சில ஜென்மங்களுக்கு புத்தி வருமா ??? என்பது சந்தேகமே !!!