எம்ஆர்டி திட்டம் மொத்தத்தையும், அதன் பாதுகாப்புமீதான ஆய்வு நடத்தி முடிக்கப்படும்வரை, நிறுத்தி வைக்க வேண்டும் என சுபாங் எம்பி சிவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றிரவு மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம், கடந்த இரண்டு மாதங்களில் நிகழ்ந்துள்ள எம்ஆர்டி சம்பந்தப்பட்ட இரண்டாவது அசம்பாவிதமாகும்.
“எம்ஆர்டி வேலை நடக்கும் இடங்கள் ஊடே அடிக்கடி பயணிப்போர் தங்களுக்குப் பாதுகாப்பு உண்டு என்ற நம்பிக்கையுடன் அந்த இடங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவ்விரு சம்பவங்களும் அந்த நம்பிக்கையைத் தரவில்லை.
“விரிவான அறிக்கைகள்வழி அந்த நம்பிக்கை நிலைநிறுத்தப்படும்வரை எல்லா வேலைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”, என சிவராசா ஓர் அறிக்கையில் கூறினார்.
எவன் செத்தா என்ன ? புரோஜெக் நடந்தா சரி இதுதான் இவர்களின்
நிலைப்பாடு.
பாதையை மூடிவிடவேண்டியது தானே.பொது மக்கள் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்.நாராயண நாராயண.
இது யார் குற்றம்?இறந்தவர்களின் நிலை,அவர்களுக்கு உரிய இழப்பிடு கிடைக்குமா?அடுத்தது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்?பதில் வேண்டும் …..
அந்த நிறுவனமே பொருப்பு,மக்கள் தவரே செய்திருப்பின்,தவறுக்கு காரணம் பொருப்பற்ற நிர்வாகம்.இன்சூரன்ஸ் நிச்சயம் இருக்கும்,இன்சூரன்ஸ் கொடுத்த நெருக்குதலே பதவி நீக்கம்.பெரிய டானா இங்கே இருக்கும்.ஒன்றும் பயமில்லை வாழ்க நாராயண நாமம்.