தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் என்.சுரேந்திரன்மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதன்வழி ஒரு அநியாயமான முன்மாதிரி ஏற்படுத்தப்பட்டுள்ளது என சுதந்திரத்துக்கான வழக்குரைஞர் அமைப்பு எச்சரித்துள்ளது.
இது, வழக்குரைஞர்கள், சட்டக் கருத்துகள் தெரிவிக்கும்போது அந்தக் கருத்துகள் அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்கு முரணாக அமைந்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இடமளித்து விடும். அந்த வகையில் இது பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துகிறது என அதன் சட்ட விவகார/பிரச்சாரப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மிட்சல் யேசுதாஸ் கூறினார்.