சங்கங்களின் பதிவகம் (ஆர்ஓஎஸ்), சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கட்சிநீக்கம் செய்யப்பட்டது பற்றி விளக்கம் கேட்க பிகேஆரைக் கூப்பிட்டிருப்பதாக தெரிகிறது.
ஆர்ஓஎஸ்ஸிடமிருந்து கடிதம் வந்திருப்பதை பிகேஆர் ஒழுங்கு வாரியத் தலைவர் டான் கீ குவோங் உறுதிப்படுத்தினார்.
ஆனால், அதில் காலிட் கட்சிநீக்கம் செய்யப்பட்டது பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“ஒழுங்கு வாரியமும் கட்சித் தலைமைத்துவமும் தவறாக நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுவது பற்றி விளக்கம் பெறவே ஆர்ஓஎஸ் அழைத்துள்ளது”, என்றாரவர்.
நாளைக் காலை 10 ,மணிக்கு ஆர்ஓஎஸ் தலைமையகத்தில் அச்சந்திப்பு நடைபெறும்.
நீடிக்குமா பி.கே.ஆர் கட்சியும் சின்னமும்.அல்லது துத்தோப் ……. ,இன்றுதான் என் வீட்டில் பறக்க விட்ட அடிலான் கொடியை அகற்றினேன்,வாரம் ஒருமுறை துவைத்து காயவைத்து வந்தேன்,நாராயண நாராயண.
உண்மையில் இந்த பதிவகத்தினர் அவ்வளவு நேர்மையானவர்களா ?
இந்த 3 கட்சியும் ஒரே சின்னத்தில் போட்டியிட …,கட்சியை பதிவு
பண்ண அனுப்பிய விண்ணப்பம் எங்கோ கிடபபிலோ, குப்பையோடு
குப்பையாகிப் போக …அதன் நிலை அப்படியிருக்க …,
நேற்று முளைத்த காளான் கதைக்கு அவ்வளவு முக்கியத்துவம்
கொடுத்து உடனே விசாரணை என்பது …யாருடைய கைப்பாவை
இந்த பதிவகம் ?
இவர்களுடைய நீதி நியாயம் …உலகம் வேடிக்கை பார்க்கிறது ???