எம்பி-க்கு ஆதரவாக என்ஜிஓ-கள் அணி திரள்கின்றன

ngoசிலாங்கூர்  மக்களைப்  பிரதிநிதிக்கும்  12  என்ஜிஓ-களின்  கூட்டணி, மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  அவரது  தவணைக்காலம்  முடியும்வரை  பதவியில் இருக்க  அனுமதிக்க  வேண்டும்  என்று  வலியுறுத்தும்  இயக்கமொன்றைத்  தொடக்கியுள்ளது.

அச்செய்தி  அமைதியான  முறையில்  தெருவிலிருந்து  அரண்மனை  வரை  கொண்டு  செல்லப்படும்  என  அதன்  தலைவர்கள்  தெரிவித்தனர்.

அவர்கள்  பக்கத்தான்  ரக்யாட்டையும்  கண்டித்தனர். மாநிலத்தின்  அரசியல்  நெருக்கடிக்கு  பக்கத்தான்  ரக்யாட்தான் காரணமாம்.

காலிட்டை  எதற்காக  மாற்ற  வேண்டும்  என்பது  சிலாங்கூர்  மக்களுக்குப்  புரியவில்லை  என  என்ஜிஓ  தலைவர்களில் ஒருவரான  பைசல்  இட்ரிஸ்  கூறினார்.

“காலிட் நல்ல  தலைவர்  என்பதை  பாஸ் கட்சியே  ஒப்புக்கொண்டிருக்கிறது”, என்றாரவர்.