பாஸ் தலைவர்: சட்டமன்றத்தைக் கலைப்பது ‘சுத்த மடத்தனம்’

hanipaசிலாங்கூர்  சட்டமன்றத்தைக்  கலைக்க  வேண்டும்  என்பது  “பொறுப்பற்ற பேச்சு, “மடத்தனமான  பேச்சு”  என  பாஸ்  மத்திய  குழு  உறுப்பினர்  முகம்மட்  ஹனிபா  மைடின்  கூறினார்.

காஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  பெரும்பான்மை  ஆதரவைப்  பெற்றிருப்பதால்  அது  தேவையற்றது.

ஆகஸ்ட்  14-இல், பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  ஹஸ்னுல்  பஹாருடின் (மோரிப்), சாரி சுங்கிப்(உலு  கிளாங்) ஆகிய  இருவரும் கட்சியின்  கட்டுப்பாட்டை  மீறி வான் அசிசாவுக்கு  ஆதரவு  அளிக்குமுன்னர்,  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  சட்டமன்றத்தைக்  கலைக்க  சுல்தானின்  அனுமதியைக்  கோரியிருந்தாரானால்  நிலைமை  வேறு  விதமாக  இருந்திருக்கும்.

அவ்விருவரும்  துரோகிகள்  என  வருணிக்கப்பட்டபோதும் சட்டமன்றம்  கலைக்கப்படுவதைத்  தடுக்க  உதவியாக  இருந்தார்கள்.

“வருங்கால தலைமுறையினர்  அவ்விரு  பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்களையும்  வெற்றி வீரர்களாக  போற்றக்கூடும்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.