பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா, தத்தளித்துக் கொண்டிருக்கும் மலேசிய விமான நிறுவனத்தை இழுத்துப் பிடித்து நிறுத்த தாம் மீண்டும் அங்கு திரும்பிச் செல்லப்போவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.
“நான் எம்ஏஎஸ்-ஸுக்குத் திரும்பப் போவதாக இணையத்தில் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். நான் அங்கு செல்லப்போவதில்லை. இங்குதான் இருக்கப் போகிறேன்”, என்று பெமாண்டு தலைவர் இன்று காலை டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இட்ரிஸ் ஜாலா 2009-வரை எம்ஏஎஸ் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்.
இதற்கு முன் அவர் சாதனையைச் செய்ய வில்லையே. இப்போது இருப்பதே பாதுகாப்பு!