கடந்த வாரம், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் செய்தியாளர் கூட்டத்துக்குச் சென்றது பற்றி விளக்கமளித்த பாஸ் சட்டமன்ற உறுப்பினர் சாஆரி சுங்கிப், தான் சென்றது அசிசாவுக்கு ஆதரவு தெரிவிக்க அல்ல என்றும் காலிட்டை நிராகரிக்கவே என்றும் கூறினார்.
“தமக்குப் பெரும்பான்மை (சட்டமன்ற உறுப்பினர்) ஆதரவு இருப்பதாக காலிட் கூறிக்கொண்டிருந்ததை முறியடிக்க வேண்டும். அதுதான் நோக்கம்.
“அசிசாவோ இல்லையோ, (காலிட்டை நிராகரிக்க) 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்பட்டது.
“அதற்கு டிஏபி, பிகேஆர் (சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மட்டும்) போதாது என்பதால் நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
திறைமையான அரசியல்வாதி. பிழைத்துக்கொள்வீர்கள்!!!! வாழ்த்துகள்.
சதிராட்டத்தில் கை தேர்ந்தவர்கள் எப்படி இப்படியெல்லாம் உங்களால் நா………………………முடிகிறது ?