ஜூலை 31-இல், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவைச் சந்தித்துப் பேசியது உண்மை ஆனால். அச்சந்திப்பில் அஸ்மின் மந்திரி புசாராவது பற்றிப் பேசப்படவில்லை என்கிறது பாஸ்.
“அஸ்மினின் பெயரே குறிப்பிடப்படவில்லை”, என்று சிலாங்கூரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் சாலேஹான் முஹ்ஹி கூறினார்.
அச்சந்திப்பின்போது வான் அசிசாவின் பெயரை அரண்மனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதைக் கடந்த திங்கள்கிழமையே சாலேஹான் தெரிவித்திருந்தார். அதன் காரணமாகவே வான் அசிசாவை பாஸ் ஆதரிக்காதிருந்தது என்றும் சாலேஹான் சொன்னார்.
“வான் அசிசா மந்திரி புசாராவதை நாங்கள் ஒத்துக்கொள்ளாததற்கு அவர் பெண் என்பது காரணமல்ல. அரண்மனை அவரை ஏற்க முடியாது என்று கூறியிருந்தது, அதுதான் காரணம்”, என்றாரவர்.