டாக்டர் மகாதிர் முகம்மட், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது பகிரங்கமாக தாக்குதல் தொடுப்பதற்குமுன் அவருக்குக் கைப்பட கடிதம் எழுதியிருந்தார் என்று கூறப்படுவதை அம்னோ மறுத்துள்ளது.
அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், “அப்படி எதுவும் இல்லை” என்று கூறியிருந்தார்.
ஆசியா செண்டினல் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று, மகாதிரைச் சந்திக்குமாறு தெங்கு அட்னானுக்கு நஜிப் உத்தரவிட்டிருக்கிறார் என்று கூறியது. மகாதிரைச் சந்தித்து அவர் அனுப்பிவைத்த ஏழு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மீட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றவர் கூறியிருந்தாராம்.
இரண்டு மூன்று மாதங்களுக்குமுன்பு கடிதம் அனுப்பப்பட்டதாக ஆசியா செண்டினல் கூறிக்கொண்டது.
முன்னாள் தலைவர் அறிவுரை சொல்கிறாரா? ஆலோசனை வழங்குகிறாரா ?
ஆட்சியைவிட்டு போகசொல்கிறாரா ? பட்சைபில்லை பாவாடையில் ஏறும்பைவிடுவதுபோல அல்லவா தெரிகிறது ? சைத்தான் வேதம் ஓதுவது ரொம்பநாளைக்கு செல்லாது.!