தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு கூட்டத்தினர் கோலாலும்பூருக்கு அருகில் உள்ள கார்ல்ஸ்பெர்க் பீர் ஆலையைத் தகர்க்கும் நோக்கத்துடன் குண்டு தயாரிப்புக்குத் தேவையான பொருள்களை வாங்கி வைத்திருந்ததாக போலீஸ் பயங்கரவாத-எதிர்ப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய அரசின் எழுச்சியால் ஊக்கம்பெற்ற தென்கிழக்காசிய தீவிரவாதிகள், உள்நாட்டில் ஒரு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது இதுவே முதல் தடவை எனத் தெரிகிறது. ஆனால், அத்திட்டம் “பேச்சளவில்” மட்டுமே இருந்திருக்கிறது.
19 பேரடங்கிய அக்கூட்டம் குண்டு- தயாரிப்புக்குப் பயன்படும் அலுமினிய தூளை வாங்கி வைத்திருந்ததாக பயங்கரவாத-எதிர்ப்புப் பிரிவு துணைத் தலைவர் ஆயுப் கான் மைடின் ராய்ட்டரிடம் கூறினார்.
அவர்களில் எழுவர்மீது பயங்கரவாத மற்றும் ஆயுதங்கள் சட்டங்களின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஆயுப் கான் கூறினார். இவர்கள்தான் பீர் ஆலையையும் மதுபான விடுதிகளையும் தகர்ப்பது பேசி விவாதித்திருக்கிறார்கள்.
மற்ற 12 பேரும் போதுமான சாட்சியங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
அருமையான இ…..ம் நாடு இதுதான் ஆரம்பம் முடிவு ????
மலேசிய தீவிரவாதியின் கூடாரம் என்பது முன்பே தெரிந்த விசியம்
இனம் பாராமல் தீவிரவாத்தை ஒழிக்கவேண்டும். வாழ்த்துகள்!!!!
தீவிரவாதிகளின் படங்களை பத்திரிகையில் வெளியிட்டால் மக்கள் விழிப்பாக
இருப்பார்கள். தீவிரவாதிகள் அதிகரிக்காமல் இருப்பதை தடுக்கலாம். இவர்கள்
யாருக்கு எதிராக வேலைசெய்யப்போகிரார்கள் ? இனத்துக்காகவா ? மதத்துக்காகவா ?
அரசிளுக்காகவா ?
அப்படியே மகாதிரின் மகனையும் பாது காத்து கொள்ளுங்கள்..உலக மார்க்கெட்டில் வெளிவரும் மதுநிறுவனம் ஒன்றுக்கு (அவர்களது மதம் வெறுக்கும் ) மகாதீரின் மகன்தான் ஆலோசகர்..இந்த பணம் ஹாலால் வகையோ ?
அந்த 12 பேர் விடுவிக்கப்பட்டனர்…இனிதான் ஆரம்பம் சிவா அவர்களே.
ஆனாலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றால் ஏதாவது சலுகைக் கொடுத்திருப்பீர்களே!
ஏற்கனவே ஒருமுறை ஏவுகணை கொண்டு தாக்கினர் குறி தவறியதால் இந்த பீர் கம்பேனி தப்பியது .இதேபோல் பத்துமலை திருத்தலமும் தப்பியது! உள்நாட்டு மதவெறியர்களின் செயல் அது . மீன்றும் வெளிநாட்டு உதவியுடன் தொடர்கின்றனர். யாருடைய ஆதரவு ?
தமிழன் சீனன் நிறுவனக்களை அழிக்க பல் நாட்டு theeviravatigalodu தொடர்பு ………………….