சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமுக்கு பேங்க் இஸ்லாத்தில் இருந்த கடனை மத்திய கிழக்கு வங்கி ஒன்று தீர்த்து வைத்ததாக காலிட்டின் சிறப்பு அதிகாரி அஸ்ருல் அஸ்வார் அஹமட் தாஜுடின் கூறியிருப்பதை அவரின் வழக்குரைஞர் மறுக்கிறார்.
“எந்த மத்திய கிழக்கு வங்கியும் காலிட்டின் கடனைச் செலுத்தவில்லை என மந்திரி புசாரின் வழக்குரைஞர்(தாமஸ் பிலிப்) என்னிடம் தெரிவித்தார்”, என பாஸ் எம்பி காலிட் சமட்(இடம்) கூறினார்.
காலிட்டின் குறைகளைப் பட்டியலிட்டு பிகேஆர் வெளியிட்ட 91-பக்கத் தொகுப்பிலும் இந்த ரிம59.5 மில்லியன் பேங்க் இஸ்லாம் கடன் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிமன்றத்துக்கு வெளியில் கடனுக்குத் தீர்வு காணப்பட்டதை ஒப்புக்கொண்ட வழக்குரைஞர் பிலிப், தம் ஆலோசனைப்படி காலிட் நடந்து கொண்டார் என்றும் கூறினார் என காலிட் சமட் தெரிவித்தார்.
“ஆனால், பிலிப் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வுகாணப்பட்ட விதத்தை விவரிக்கவில்லை. அதை வெளியிட காலிட்டின் அனுமதி இல்லை என்றார்.
“கடன் தொகை செலுத்தப்பட்டதை மட்டுமே உறுதிப்படுத்தினார். தொகையைக்கூட வெளியிட விரும்பவில்லை”, என அந்த ஷா ஆலம் எம்பி கூறினார்.
எங்க சார் நீங்க செல்லுரத மக்கள் ஏற்கராங்க ? தினக்குரல் பத்திரிக்கை சுமார் பத்து நாட்கள் மந்திரிபுசார் காலிட் பற்றியும் , மந்திரி பெசார் பதவிக்கு ஏன் பெண்கள் முடியாத என்ற கேள்வி கேட்டு வெளியிட்ட செய்தியை படித்தால், மாற்றம் மத்திய அரசில் மட்டுமல்ல, மாநிலத்திலும் , மந்திரி பெசார் பதவியிலும் அவசியம், அன்வார் என்ற தனிமனிதனை வைத்து அரசியல் நடத்துக்கூடாது. அந்த தனி மனிதனின் செல்வாக்கை நாட்டில் தேசிய மாற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் இந்திய சமுதாயத்திற்கு நன்மை ஏற்பட்டால் நன்று, இல்லை என்றால் மீண்டும் மாற்றுவோம் அது தான் அரசியல்!
தினக்குரல் பத்திரிக்கை சுடும் உண்மைகளின் ஒரு பகுதி – மந்திரி பெசார் பதவி காலிட்டுக்கு மட்டும் சாசனமில்லை!
கெஅடிலானின் பல ஆரம்பக் காலத் தலைவர்கள் அம்னோவில் மீண்டும் இணைந்து விட்டப் போதிலும், கெஅடிலான் துணைத்தலைவர் அஸ்மின் அலி மட்டும் இன்னும் அன்வாரின் தீவிர ஆதரவாளராகக் கட்சியில் இருந்து வருகிறார்.
அது -கொள்கை பிடிப்பு, பல விதப் போட்டிகளுக்கும், உள் மற்றும் வெளிச் சக்திகளின் சூழ்ச்சிகளுக்கும் இடையில் – தேசியத் துணைத் தலைவராக அஸ்மின் தேர்ந்தெடுக்கப் பட்டது அவரின் துடிப்புமிக்க தலைமைத்துவத் தகுதிக்கு உறுப்பினர்களின் அங்கீகாரம்.
ஆனால் காலிட், அஸ்மினை ஆட்சிக்குழுவில் சேர்த்துக் கொண்டால் தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்றே அவரை ஓரம் கட்டி வந்தார். இப்பொழுது கட்சித்தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிசாவிற்கும் வழிவிட மறுத்தது காலிடின் சுயநலப் பதவி வேட்கை.
பதவி விலகலில் அவர் காட்டும் பிடிவாதம், தனக்கு பின் பக்காத்தான் இருக்கக் கூடாது என்ற மனப்பான்மையை காட்டுகிறது. கடனோடு பக்காத்தானுக்கு வந்தவர், எப்படியோ கடனை அடைக்க கெடிலான் ஒரு வாய்ப்பு வழங்கி விட்டது. அதற்கு பாரிசானுக்கு வழங்கும் பரிசு. சிலாங்கூர் மாநில ஆட்சி. , ஒரு
பெண் நாடாள முடியாத?
பாஸ் இந்த முடிவுக்கு வர இரண்டு முக்கியக் காரணம் முதலாவதாக மதம். பெண் மந்திரி பெசார், இரண்டு பைபிள். விவகாரத்தை, தன் பதவியைத் தற்காத்துக் கொள்ள காலிட் பயன் படுத்திக் கொண்ட விதம்.
அதில் அரண்மனையைத் திணித்து, இஸ்லாமியத் தீவிரவாதப் பிரிவு, மற்றும் பாரிசான் ஆதரவு பத்திரிக்கை மூலம் தன்னை ஒரு இஸ்லாமிய போராட்டவாதியாகி விட்டார்.
ஒரு ஜனநாயக நாட்டில் அரசச் சடங்கைக் காட்டிலும் பல முக்கியப் பணிகள் மாநில மந்திரி பெசாருக்கு உண்டு என்பதை அறியாதவரா அரசர். இப்படிப்பட்ட அசௌகரியங்களைத் தவிர்க்க துணை மந்திரி புசார் பதவி உண்டு. .
எங்கும் எதிலும் பெண்கள் என்று ஆகி விட்ட யுகத்தில் பெண்களின் பதவியேற்பைத் தடுப்பவர்கள் அரசியலில் செல்லாக்காசாகி விடுவார்கள்.
உலகில் ஆண்கள் சந்திக்க முடியாததை, பல பெண் தலைவர்கள் வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளனர். இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் மீது போர் தொடுத்துப் பல அரபு நாட்டு ஆண் தலைவர்களை அசர வைத்தவர் கோல்டா மேயர்.
இந்தியாவின் பெண் சிங்கம் இந்திர காந்தி, இந்தோனிசியா, பாகிஸ்தான், பங்களா தேசம் போன்ற பெரிய இஸ்லாமிய நாடுகளில் அதிபராகவும், பிரதமராகவும் பெண்களை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனால் இங்குள்ள பிற்போக்குவாதிகளின் கூட்டம் பெண் என்பதால் ஏளனமாகப் பேசினாலும், உள்ளூர மலேசியப் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கண்டு பீதியடைந்திருப்பதாகவே தோன்றுகிறது. ஆதலால் பெண்கள் தலைமைத்துவத்தைத் தவிர்கவே அன்வார் குடும்பப் பின்னணியை முன் நிறுத்துகிறார்கள்.
தன் கணவர் சிறையில் இருந்த பொழுதும் கெஅடிலான் அமைப்பு காலம் தொடங்கி, பல இன்னல்களின் ஊடே கட்சியையும், குடும்பத்தையும் கட்டிக்காத்து வந்துள்ள டத்தோ ஸ்ரீ வான் அஸிசா, நாடாளுமன்ற \ சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் பரந்த அனுபவத்தைப் பெற்றவர். மக்களால் எளிதில் அணுகக் கூடியவரும், ஏழை மக்களின் உணர்வுகளைப் புரிந்து மதிக்கும் தன்மை கொண்டவர்.
மாநிலத்தில் அவரின் தேர்வு மலேசிய அரசியலிலும் புதிய அலையை உருவாக்கும் என்பதால், தேசிய அரசியலில் பக்காத்தானின் எதிரணியிலுள்ளவர்களும் டத்தோ ஸ்ரீ வான் அஸிசா சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக வருவதைத் தவிர்க்க விரும்புகிறார்கள்.
இன்றைய நவீன யுகத்தில் இனியும் தனி மனித தாண்டவம் அவசியமில்லை! பக்காத்தான் உண்மையாக நீதியுடன் மாற்றத்தை விரும்பினால் கூட்டுத் தலைமைத்துவ அணுகுமுறையால் மாநிலத்தை மட்டுமல்ல நாட்டையே வளைகளாம், பெண்கள்!
நாங்கள் ஆதரிக்கிறோம் வான் அஹ்சிசாவை,பெண் ஏன் இந்த மாநில மந்திரி புசார் ஆவகுடாது?ஆகலாம்!பெண் பொறுப்பு வேரமாதறி ஒவொரு வீட்டில் அதை நாம் பார்க்கலாம்.இப்பவும் சொல்லுறேன் டத்தின் வான் அடுத்த மந்திரி புசார்…சுல்தான் அவர்கள் அந்த நல்ல முடிவை அறிவிப்பார் …பொறுத்திருங்கள்…
ஷா ஆலாம் MP சார் ரொம்பாதான் உழப்புகிரீர். நீங்கள் பத்திரிகையில் வருவதால் ….நாங்களும் வருவோம்.
உங்கள் கட்சியில்தான் உப்பை தின்னர்வர்கள் போல துப்பி விட்டார்களே ?
இன்னும் ஏன் MB பற்றி உங்கள் குசும்புத தனம்? தலைவர் சொன்னதை துணை தலைவர் மாற்றி விட்டார்? DAP சொன்னதை சொதப்பி விட்டது ? PKR முழு நேர அரசியல் சடு குடு சதுரங்கம் தேயும் வரை ஆடும்.
காலீத் சொந்த கடனை ……….யாரைவது பிடித்து எப்படியோ தீர்த்தார், நீங்கள் ஏதும் வட்டி கிட்டி கட்டினீர்களா? இப்படி MP கள் படித்தவர்கள் எல்லாம் கொசவன் போல பேசினால் நாங்கள் பாமர மக்கள் உங்களை எங்கு வைப்பது? நீங்கள் PAS “லாவ” மேக்கர் வேற என்று கேள்வி பட்டேன் இப்படி “லேமேன்” அதுவும் MB கு சிக்கல் வந்தததும் ஊது உசப்பல் மந்திரங்கள் ஏன் ?
அரசியல் தன வீரியம் முன்பே வந்திருந்தால் மதிப்போம். MACC கு கொண்டுபோவ இப்ப நேரம் உங்கள் பாக்கம் செய்யுங்கள் அரசியல மத நீதியை நிலை நாட்டுங்கள்?
நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்ளும் சக்கைகளை எல்லாம் பேசுவோமானால் ஒரு ” ரேபோர்மாசி நீதி மன்றம் திறக்க வேண்டும்”.BN கால பில்களை, பைல்களை திறக்க செய்யுங்கள். கோர்ட்டுக்கு வெளியே தப்பு என்றால்…. உங்கள் பாசையில் ஹூடுத் சட்டத்தில் இன்று குறைந்தது 5000 பேர் கை இல்லாமல் மலேசியாவில் திரியலாம்.
கேஸ் மனஜெமென்ட் என்ற வக்கர யுக்தி வைத்து நீதிபதிகள் சுமை குறைய நீதிமான்கள் நீதி தேவதை கண்களை
குருடாக்குவார்கள்.காசுக்கும் கீசுக்க்ம் வாதி பிரதிவாதிகளை பேரம் பேசும் லவ் (law ) வேண்டாம் என்று பேசுபவர்கள் உண்டு சார்!
அரசியல் வாதிகள், அமைச்சர்கள், டுன்கள் ,செனட்டர்கள், உங்களைபோல் MP என்றால் வங்கியில் ஒரு வசதி உண்டு. கடன் வட்டிகள் NONE PERFORAMANCE LOANS (NPL ) என்று கழிததுவிடும் கைகாசு சலுகை உண்டு. அதுவும் பூமிபுத்ரா என்றால் இன்னும் ஜோக்கா பேரம் பேசலாம். வங்கிகள் .என்பது .”வாங்கி கொடுக்கும் பெட்டகம்” தானே சார். என்னிடம் இத்தகைய வங்கி வசதி குபேரங்கள் உண்டு.
ஏன் மலேசியாவில் அயல் நாடு கடன் US 1.5 பில்லியனாம் அதாவது MR 5 பில்லியனாம் யாரும் கேக்க மாற்றிங்கா? எப்படி கட்டுவது என்ன provision உண்டு ? மக்களும் நாடும்தான் உத்தரவாதம். மத்திய வங்கியிலும் கோட்டிலும் ஏதும் வெளியே வசதி இருக்குமா என்று விசாரியுங்கள் புண்ணியமா போகும்.
அரசியல்தன தாகத்தில் MB வேண்டாம் என்றால் எல்லாரும் கூடி கொல் /கொள்வீர்கள் .வேண்டும் என்றால் துடைத்துக்கொண்டு சப்பிகலாக போவீர்கள். முன்னணிக்கும் கும் கூட்டுக்கும் என்ன சார் வித்தியாசம் ?
எல்லாம் பொருளாதரா அரசியல் தானே?
அரசியல் கட்சி வரம்பில் MB கு மாநில MP கள் மீதான KPI கார்டை சமர்ப்பிக்கும் சட்டம் இருந்தால் இப்படி ஆளுக்கு ஆளு பத்திரிக்கை ஆட்டம் ஆடமாட்டீர்கள். போய் தொகுதியில் கொசு இருந்தால் உதவுங்கள். அல்லது சுகமிலா மந்திரி அமச்ச்சரை பாருங்கள்.கொசுவையாவது ஒழியுங்கள்.
MB சொதபபளுக்கு பிறகு “இப்ப கேற்பது கேவலம்தான்”. இருந்தும் கேட்டு வைப்போம்…. அது எங்கள் இன்றைய ஆதங்கம் ????
சிலாங்கூர் மாநில பாகத்தான் MP நாடாளுமன்ற களின் சாதனைதான் என்ன ? ! ? MB சாதனைகளை பாட்டியல் இட தயார். MP கள் கூச்சல் மட்டுக்கும் அல்லது காஜாங் சாத்தே அரசியலுக்கு மட்டும்தான் என்றால். நாங்களும் சாதே குஆ செய்ய முடியாது. ரேபோர்மசியை ஜனநாயக வேற்றிக்கு வார்த்தெடுங்கள். ஒன்றாய் உருப்படுவோம்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் நாணயமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி அதிலும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் செயல்படுவதும் வரவு செலவு விவகாரத்தில் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். ஆனால், மந்திரி பெசார் காலிட் மக்களுக்கு கணக்கு காட்ட வில்லை, காபந்து அரசு தலைவராக இருந்த பொழுது, மாநில சொத்தை விற்க இவருக்கு அதிகாரமில்லை. இது குறித்து அம்னோ ஏ.சீ.ஏ புகார் என்று செய்திகள் வரும்பொழுது பக்காத்தான் தலைவர்கள் எப்படி கண்களை மூடிக்கொள்வது? கட்சி விசாரித்தால், காலிட் உண்மையை உடைக்க வேண்டியதுதானே! ஒத்துழைப்பு வழங்கத்தானே வேண்டும், குற்றமற்ற காலிட் ஏன் விசாரணை கூட்டத்திற்கே போகவில்லை? இது திமிர் தானே ? மந்திரி பெசார் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? இது தான் பக்காத்தானா? ஆக, கணக்கு கேட்பவர்களை சாடுவதை விடுத்து, ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் போன்றவர்கள் உண்மைக்கு தொடர்ந்து குரல் கொடுக்க ஆதரிக்க வேண்டும்! பாரிசான் திருட்டுப்பயல் ராஜியத்தை மட்டுமே ஒழிப்போம், பக்காத்தான் திருடினால் வாயை மூடிக்கொள்வதா? சுத்தக் கேப்மாறிக் கூட்டம்! வேடிக்கையான மனிதர்கள் !
உப்பை தின்னவன் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தன்னிற் குடித்துதான் ஆக வேண்டும்.தன் ஸ்ரீ கலிட் நியாமானவர் என்றால் அவருக்கு எங்கிருந்து 59.5 மில்லியன் ரிங்கிட் வந்தது என்று சிலந்கோர் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.அவர் தொடர்ந்து மவுனமாக இருந்தால் வெளியில் சொல்லப்படுவது அனைத்தும் உண்மை என்றாகிவிடும்.எப்போது கலிட் இந்த பணவிவகாரத்தில் வாயை திறப்பார் என்று காத்திருக்கிறேன்.