-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 21, 2014.
எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் உளருகிறார் டாக்டர் எஸ். சுப்ரமணிய்ம்!
மஇகாதான் இந்தியர்களின் பிரதிநிதி என்று எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 68 ஆவது மஇகா கூட்டரசு பிரதேச மாநாட்டில் தலைமையுரை ஆற்றும்போது கூறியிருந்தார்.
இப்பொழுது எதிர்க்கட்சியில் இருக்கும் தலைவர்கள் பெரும்பாலோர் முன்னாள் ஆளும் கட்சியின் தலைவர்களின் பிள்ளைகள்தான் என்பதை டாக்டர் சுப்ரமணியம் மறந்துவிடக்கூடாது.
என் தகப்பனார் கூட மஇகா லுமூட் டிவிஷன் தலைவராக இருந்தவர்தான். அவரின் மகனான நான் இன்று எதிர்க்கட்சியில் ஒரு தலைவனாக இருக்கிறேன். அது அவருக்கு தெரியும் என்று நம்புகிறேன்.
நன்மையோ நன்மை!
மஇகா இந்தியர்களை பிரதிநிதித்ததால் வந்த “ நன்மைகளை” கொஞ்சம் பட்டியலிடவா?:
• 1986 இல் இந்தியர்களின் சொத்துடமை இந்த நாட்டில் 12 % உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்கள்.இப்பொழுது நமது நிலை என்ன? 1.2% கூட இல்லாமல் இருக்கிறோம். 1986ஆம் ஆண்டில் இருந்ததைவிட 10% பின்னால் இருக்கிறோம்!
• 1970 களில் 17% ஆக அரசாங்கத் துறையில் இருந்த இந்தியர்கள் இன்று 4% ற்கும் குறைவாவாக இருக்கிறார்கள்!!
• பல்கலைக்கழகங்களிலே 10 % மேலிருந்த மாணவர் எண்ணிக்கை இப்பொழு 1.5% இருக்கிறது!!!
இவைகள்தான் மஇகாவின் சாதனைகளா? இவைகள் குறித்து மஇகா பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டுமா?
2008 தேர்தலுக்கு பிறகு பினாங்கு மாநிலம்தான் நாட்டிலேயே முதலாவது மாநிலமாக எல்லாத் துறையிலும் விளங்கி வருகிறது. சிலாங்கூர் மாநிலமும் பொருளாதாரத்தில் அதே போல சிறப்பாக செயல் பட்டு வருகிறது. ஏன் இந்த முன்னேற்றம் பாரிசான் ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களில் ஏற்படவில்லை?
ஓர் இந்திய துணை முதலமைச்சரையும், இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் பினாங்கு மாநிலம் கொண்டுள்ளது.
இவைகளெல்லாம் எதிர்கட்சியினற்கு ஆளும் வாய்ப்பு வழங்கப்பட்டால் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அதனால் இந்தியர்களும்
நல்ல வாய்ப்பு வழங்கப்படும் என்பதற்கான அறிகுறிகள். எங்கே உங்கள் அறிகுறிகள்”?
மஇகாதான் இந்தியர்களின் பிரதிநிதி என்றும் சொல்லும் நீங்கள் எப்படி அந்த பிரதிநிதித்துவத்தை பினாங்கு, கெடா, சிலாங்கூர் பேரா பாஹாங் கூட்டரசு பிரதேசம் போன்ற மாநிலங்களில் இழந்தீர்கள்?
9 நாடாளுமன்றத் தொகுதிகளை வைத்திருந்த நீங்கள் இப்பொழுது 5ஐ மட்டுமே வைத்துள்ளீர்களே!
இதுதான் சாதணையின் புது அர்த்தமா?
சட்டமன்றதில் ஏறக்குறைய 13 இடங்களில் மண்ணைக் கவ்வி உள்ளீர்களே! மண்ணைக் கவ்வுவதும் உங்களின் சாதனைப் பட்டியலிலுள்ளதா?
இந்தியர்கள் என்றோ உங்களை ஒதுக்கிவிட்டார்கள் என்று இந்த மாநிலங்களில் மஇகா கடந்த தேர்தலில் அடந்த தோல்விகளே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இதைக்கூட சொல்லித்தர வேண்டியுள்ளது
நாடாளுமன்றத்தில் இந்தியர் பிச்சனைகளுக்கு தைரியமாகவும் ஆணித்தரமாகவும் உரக்கக் குரல் கொடுப்பதால்தான் அரசாங்கம் ஏதோ அவர்களுக்கு செய்கிறது என்று முன்னாள் மஇகா தலைவரும் அமைச்சரும் தன் வாயாலேயே என்னிடம் கூறியுள்ளார் என்பதனை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எஸ்கோர்ட் பள்ளிக்காக நான் 2010 ல் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால்தான் விரைவாக தண்ணீரும் மின்சாரமும் வழங்கப்பட்டது என்பதை நாடறியும். இது நாடாளுமன்ற குறிப்பேட்டிலும் பதிவாகியுள்ளது.
ஜனநாயக ஆட்சியில் எதிர்கட்சிகள் ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிகாட்டத்தான் உள்ளனவேயன்றி அவற்றின் வேலையைச் செய்ய அல்ல. இதைக்கூட சொல்லித்தர வேண்டியுள்ளது!
மேலும் மக்கள் வரி, சுங்கத் துறை வருமானம், இயற்கை வளத்தில் இருந்து பெரும் பணம் இவை யாவும் ஆளும் கட்சியிடம்தான் போகிறது.
பணத்தையும் அதிகாரத்தைம் நீங்கள் வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்.
அதை எதிர்கட்சி செய்யவேண்டுமென்று நீங்கள் கூறுவது அறியாமை.
நாங்களும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் செய்வதை விட இன்னும் சிறப்பாகவே செய்வோம்.
மஇகாவின் மதிப்பு எங்கே இருக்கிறது?
எடுத்துக்காட்டாக, இந்தியாவின் தற்போதைய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியில் இருந்த போது அந்நாளில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களை கடுமையாக சாடி வந்தார்.
தான் ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றங்களை கொண்டுவரமுடியும் என்பதை மக்கள் முன் வைத்து இன்று ஆட்சியையும் பிடித்து விட்டார்,.
எல்லா இந்தியர்களுக்கும் நாங்கள்தான் பிரதிநிதி என்று மார் தட்டும் நீங்கள், கூட்டரசு பிரதேச மஇகா ஆண்டுக் கூட்டதற்கே உங்கள் தேசிய தலைவரையே வரவழைக்க முடிய வில்லையே?
அவராலேயே நீங்கள் நடத்தும் கூட்டத்திற்கு வந்து உங்கள் பேராளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற துணிவு இல்லாத போது ஒட்டு மொத்த இந்தியர்களின் பிரச்சனையைக் கலைய மஇகாவால் எப்படி முடியும்?
இதே போலத்தான் இந்து அறவாரியத்தின் தலைமை ஆலோசகராக உங்களில் ஒருவரை நியமிக்க அரசாங்கம் ஒத்துக்கொள்ளாமல் ஒரு சீனரை நியமித்தார்களே! அதிலிருந்தே தெரியவில்லையா மஇகாவின் மதிப்பு எந்த இடத்தில் இருக்கிறதென்று.
வி.டிசம்பந்தன், வி. மாணிக்கவாசகம் போன்றோரின் காலத்தில் மஇகா ஏதோ ஓர் உன்னத நிலையில் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் தலைவர்கள் தங்களுடைய சொந்த பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து சமுதாய நலன் காத்தார்கள்.
இந்தியர்களுக்காக குரல் கொடுத்து எந்த மஇகா அரசியல்வாதியாகிலும் சிறை சென்றுள்ளார்களா?
ஆனால் எதிர்கட்சியில் இருந்த இந்திய அரசியல்வாதிகள் வி.டேவிட்,பி. பட்டு, கர்பால் சிங், வி. கணபதி ராவ், எம். மனோகரன், ஆர். கங்காதரன் போன்றவர்கள் இந்தியர்களின் உரிமைக்காக போராடி சிறை சென்றவர்கள்.
ஆனால் கடந்த 30 வருட காலங்களில் வந்த தலைவர்கள் சமுதாய பெயரை வைத்தே சமுதாயத்தை சுரண்டி விட்டார்கள்.
இந்தியர்களுக்காக ஒதுக்கப்படும் நிலங்களையும்,மானியங்களையும் கலேபரம் பண்ணுவதில் இன்றைய மஇகா தலைவர்கள் பலே கில்லாடிகள் ஆகிவிட்டார்கள்.
இதே போக்கை மஇகா கடைப்பிடித்து வந்தால், இனி வருங்காலங்களில் ஓர் இடத்தில்கூட போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல் போய் வெறும் நியமனங்களுக்காக மஇகா பாரிசானிடம் கையேந்தி நிற்கும் நிலை வரலாம்.
தனது செயல் பாடுகளையும் தூர நோக்கு சிந்தனையும் கால மாற்றதிற்கேற்ப மஇகா சரி செய்து கொள்ளவில்லை என்றால் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி போல மலேசிய இந்தியர் காங்கிரஸும் இருக்கும் இடம் தெரியாமல் போகும் வாய்ப்பு பிராகாசமாக உள்ளது..
நீங்கள் பெருமைப்பட்டுகொள்வது போல மஇகா திறமையாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற கட்சி என்றால், இன்று மக்கள் கட்சி, ஐபிஎப் கட்சி, நல்ல கருப்பன் கட்சி என்று பல கட்சிகள் இந்தியர்களைடையே உருவாகியிருக்காது.
பிரதமர் நஜீப் கூட உங்களின் “திறமைக்கான” சான்றாக, உங்களை நம்பாமல் இந்தியர்களுக்கான மானியங்களை அரசு சாரா இயக்கங்களுக்கு நேரடியாக கொடுக்க உத்தரவிட்டுள்ளாரே! இது போதாதா உங்களின் இந்திய பிரதிநிதித்துவ சவுடாலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தின் தரத்தை எடைபோடுவதற்கு!
டாக்டர் எஸ். சுப்ரமணியம் தன்னிலை அறிந்து எதிர்க்கட்சிகளை வம்புக்கு இழுக்காமல் அடக்கமாக பேசுவது அவரின் கட்சி தொடர்ந்து படுகுழி நோக்கிச் செல்லாமல் தடுக்க உதவும்.
குலா அவர்களே! உங்கள் கேள்விகளுக்கெல்லாம் அவர்கள் ‘ரெடி மேட்’ பதில் வைத்திருக்கிறார்கள்.கொள்ளையடிப்பது மட்டும் தான் நாங்கள். பதில் வேண்டுமானால் ஹின்ராப் வேதமூர்த்தியைக் கேளுங்கள்! தலைவன், குட்டித் தலைவன் அனைவரும் இப்போது இது தான் பதிலாக வைத்திருக்கிறார்கள்!
சபாஸ் சரியான போடு மைக்கு
இந்தியர்கள் 12%பொருளாதரத்தில் இருந்துலார்கள் அன்றைய நாள்,அனால் இன்று 1.2% மற்றும் எல்லாம் அரசாங்க துறைகளில் படு வீழ்சி இந்த செய்தி இந்தியர்கர்களுக்கு பெரிய இடி இனி மா இ காவை நம்பினால் இந்தியர்களுக்கு பாதல குழி …..
திரு குல அவர்களே நீங்கள் சொலுவது உண்மை .இப்பொழுது இவர்களின் முக்கியமான தலைவர்களே அரசாங்கம் இந்திய சமுதயதுக்கு கொடுத்த நிதி எங்கே போனது என்று கேட்க தொடங்கி விட்டார்கள் .அதில் முக்கிய மாணவர் சுப்ரமணியத்தின் நெருங்கிய நண்பன் அம்பங் முனியாண்டி .சரவணன் கூடரசு பிரதேச துணை அமைச்சரரக இருக்கும் போது,உண்மையாக மக்கள்காக உழைத்த அரசு சார்ப்ற்ற இயக்கங்களுக்கு கிடைத்த மானியத்தை எடுத்து ம இ க உறுப்பினர்கள் நடத்தும் அரச சார்பற்ற இயக்கங்களுக்கு கொடுத்தது மறக்கவே முடியாது .செராஸ் தமிழ் பள்ளிக்கு கொடுத்த வாக்குறிதியை இன்னும் காப்பற்ற வில்லை.அனால் படம் மட்டும் பிடித்து பட்ரிகையில் போட்டு விட்டார்கள் .செந்துல் பாசார் பின்னாலே அமைந்திருக்கும் சிறிய சிவன் ஆலயம் ம இ க குடும்ப உறுப்பினர்களால் நடத்த படுகிறது.இந்த ஆலயத்துக்கு RM 50000 ,மாணியம் பழனிவேல் கொடுத்தார் .அனால் பொது மக்களால் நடத்தும் ஆலயங்களுக்கு மானியங்கள் கிடைக்க வில்லை .
தம்பி குலசேகரா! நான் ம.இ.கா. ஆதரவாளன் அல்ல. அது ஒரு செத்த பாம்பு. அதை அடித்து பிரயோஜனமில்லை. சுப்பிரமணியம் சொன்னதில் என்ன தவறு? மிளகாய் நடுவது எப்படி என நாடு பூராவும் கூட்டம் போட்டு நடமாடும் சரவணனின் வாலைப் பிடித்துக் கொண்டு நீரும் சுற்றுவதைப் பார்த்து, சுப்பிரமணியம் அப்படி கூறினாரோ என்னவோ.!
குலா அவர்களே சரியான போடு.
மாண்புமிகு குலா அவர்களே! அந்த மரமண்டைகளுக்கு எங்கே விளங்க போகிறது.
மக்கள் கமெண்ட்
குலா அவர்களே ,ம இ கா காரனுக்கு புத்தி முட்டியிலேதான் இருக்கு ,டாக்கடருக்கு படிச்சவனெல்லாம் அரசியலுக்கு வந்தால் உருப்பிடுமா சமுதாயம் .தன் சுய நலத்தை தான் பார்ப்பானுங்க ப…ணிங்க
SINGAM நீ என்ன ம இ கா காரனா ,,போயி கஞ்….. சரவணன் வாழை பிடிச்சி சுத்துடா
இந்தியருக்கு நன்மை தரும் எந்த திட்டத்துக்கும் துணை நிர்ப்பார் இந்த குலா. அது, ம இ கா செய்தாலென்ன எதிர்க்கட்சி செய்தாலென்ன?? கட்சி பாராமல் கரம் கொடுப்பார் இந்த குலா. இதுதான் ம இ கா தலைவனுக்கும் எதிர்க்கட்சி இந்திய தலைவனுக்கும் உள்ள வித்தியாசம்.!!!!
உண்மையாக கூறினீர்கள் திரு குலா அவர்களே,ம.இ.கா ஒரு மானம் இழந்த கட்சி….இது நாள் வரைக்கும் வேதமூர்த்தி அவர்கள் கேட்ட ர்ம்540 மில்லியன் கணக்குக்கு இது நாள் வரைக்கும் சரியான பதில் இல்லை….அதனால் அவர்களை ஒரு பிரயோசனம் இல்லை….டத்தோ சுப்ரமணியம் அடுத்து வரபோகிற தேர்தலில் சிகாமட் தொகுதியில் படும் தோல்வியை தழுவ இருக்கிறார்…..என்பதை அவருக்கே தெரியவில்லை போலும்…சிகாமட் மக்கள் இப்பொழுது விழிப்புடன் உள்ளார்கள்….சிகாமட் சேர்ந்தவரிடம் படும் தோல்வியை இந்த மலாக்கா குடிமகன் தழுவுவான்…என்பது உறுதி…..
ம இ கா தான் இந்தியர்களின் பிரங்கி,கோட்டை என்று வர்ணித்தார்கள் எதற்கு அப்படி வர்ணித்தார்கள் தலைவர்கள் இப்பொழுது புரிகிறது ……14வது தேர்தல் வரும் இவர்களுக்கு காத்திருக்கு பிரங்கி………யாங் ஆமாத் பெர்ஹோர்மாத் குலா அவர்களே உங்கள் துணிச்சல் யாருக்கு வரும் தொடர்ந்து பிரங்கி குண்டுகளை பொழியுங்கள் மாற்றம் வரும் இது சத்தியம் ………..
டேப் கல்லூரி – எய்ம்ஸ் பல்கலைகழகம் இரண்டும் ம இகா சொத்து என்று பெரும் வசூல் செய்தார்கள்..இன்று அதில் நம்மை தவிர அங்கே அதிகம் இருப்பது பிற இன மாணவர்கள்தான்.-மயீகாவில் 5000 துக்கும் அதிகமான கிளைகள் உள்ளதாக தெரிகிறது..1 கிளை 1 தவணை 1 மாணவரை தத்து எடுத்தால் கூட இன்றைய நிலையில் லட்ச பட்டதாரிகள் உருவாகி இருப்பார்கள்..என்ன செய்ய,,? நமக்கு தேவை ஒட்டு போடஅப்பாவி மக்கள்-ஆடம்பரம்-பதவி-நிலம்-குத்தகை-பணம்-அந்தஸ்து………
இந்நாட்டில் இந்தியர்களுக்காக உரிமை குரல் கொடுக்க மயீகா தயாரா . நமக்கு அரசாங்க வேலை / பல்கலைகழகம் / /மெட்ரிக் / தமிழ் பள்ளி / இன்னும் பல துறைகளில் நமக்கு ஏன் ஒர வஞ்சனை . ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி கேட்க மாயீகாவுக்கு தில் இருக்கா .அமைச்சர்கள் செனடர்கள் பங்கு என்ன ???????????
இந்து அறவாரியத்தில் ஆலோசகராக ஒரு சீனரை நியமனம் செய்ததிலிருந்து ம.இ.கா. எந்த அளவுக்கு அம்னோ தலைவர்களால் மதிக்கப் படுகிறது என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம். திரு.குலா அவர்களே, உங்கள் கருத்துக்களையும், ம.இ.காவின் “சாதனைகளையும்” நாளிதழ்களில் இடம் பெற்றால் ( மதி இல்லா காங்கிரஸ் – ம.இ.கா) ஆதரவாளர்கள் மண்டையில் ஏறலாம். வாழ்க வளமுடன் திரு.குலா அவர்களே!
மீ
ka
mic ஒரு நடை பிணம்
எல்லாம் சரி !!! அது ஏன் இந்தியாவை உதாரணம் சொல்கிறீர்கள்.
இந்தியாவில் ஆளும் கட்சி எதிர் கட்சியாவதும், எதிர் கட்சி ஆளும் கட்சியாவதும், தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி மாறுவது சகஜம்.
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியானாலும், பாரதிய ஜனதா ஆட்சியானாலும் அல்லது இதர எதிர் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தாலும் எந்த வித்தியாசமும் இல்லை.
தேர்தலில் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகள், தேர்தல் முடிவு வெளியாகி கொண்டிருக்கும்போதே காற்றோடு காற்றாக கலந்துவிடும்.
தங்களது ஆட்சிக்கு ஆபத்து என்றால் உடனே ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பி மக்களுக்கு ” JAYHIND ” உணர்வை (மக்களை திசை திருப்பவது) ஏற்படுத்தவதில் பலே கில்லாடிகள் இந்தியாவில் உள்ள அகில இந்திய அரசியல் கட்சிகள்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா இரு கட்சிகளும் ஊழலை ஒழிப்போம் என்பார்கள். ஆனால் ஆட்சி மாறியவுடன் வெளியாகும் ஊழலை
பார்த்தால் இரு கட்சிகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றே கூறலாம்.
பாரதிய ஜனதாவோ இந்துக்களின் ஓட்டை கவர ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்பார்கள். இரண்டு தவணை ஆட்சில் இருந்தும், ராமருக்கு கோயில் கட்டாமல், ராமரை வனவாசத்திலே விட்டதுதான் மிச்சம்.
மோடி ஆட்சியில்தான் குஜராத் மத கலவரத்தினால் பற்றி எரிந்தது.
இந்த மத கலவரத்திற்கு காரணமே மோடிதான் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் பேசபடுகிறது.
அதுமட்டுமா, இன்று பிரபலமாக பேசபடும் ” 3G ” ஊழலுக்கு பிள்ளையார் சுழி போடபட்டதும் பாரதிய ஜனதா ஆட்சியில்தான் என்பதனை மறந்து விட்டு, இந்தியாவை உதாரணம் சொல்லி இருக்கிறீர்கள்.
ஷபாஸ் , மா இ காவிற்கு சரியான சாட்டையடி கிடைத்துள்ளது ஜால்ரா போடும் கூட்டமொன்று இவர்கள் பின்னால் .தான் ஸ்ரீ மானிcக்கவாசகம் மற்றும் துன் சம்பந்தன் காலத்தில் நம் இந்தியர்களின் நிலை எப்படி இருந்த்தது என்பதை நாம் அறிவோம் .
உண்மைதான் குலா ,நீங்கள் குறைக்கும் நாய் தான் ,ம.இ.க
தலைவர்கள் கூறியதில் தவறு இல்லை , நம்ம வீட்டு நாய்
யாரை குரைக்கும், திருடனை கண்டால் குரைக்கும் ,பேயை கண்டால் குரைக்கும் என்பது ம.இ.கா வினருக்கும் தெரியும்
ம.இ.கா காரன் திருடன் நம்மை கண்டால் குலா குறைக்கதானே செய்வார் ,அவனுங்க யார் என்பதை உங்களை குரைக்கும் நாய் என்று சொல்லுவதில் இருந்து
தெள்ள தெளிவாகா புரியுது நைனா. குலா குறைப்பதோடு
நின்று விடுங்கள் அவர்களை கடித்து விடாதீர்கள் அப்புறம்
ம .இ.கா கொடிய விஷம் ஏறினால் நீங்கள் உங்கள் தொப்புளை சுற்றி 16 இல்லை 36 ஊசிகளை போட்டாலும்
அவங்களின் விஷம் வெளியேறாது உஷார் நைனா .
தெரு நாயா,ட்ரேய்னிங் நாயா.லைசன்ஸ் உள்ள நாயா இல்லாத நாயா,எந்த ரக நாய்ப்பா.தீர்வு தேட துணியுங்கள்,முடிவில்லா பிரச்சனையை பேசி என்ன பயன்.சாதாரண மக்களுக்கு நன்மை சேர ஏதாவது புது திட்டம் தீட்டி செயல்படுங்கள்,சிக்களில் சிக்கி கிடக்கும் பிரச்சனையை பேசி நான் இன்னும் இருக்கிறேன் காட்டவா.மலாக்கா ஜாசினில் ஹிந்து கோவில் உடைப்பட்டது தெரியாதா,அது தானா புக்கான் மெலாயு தானே,எதற்காக உடைத்தனர்.நாராயண நாராயண.
காய்க்கும் மரம்தான் கல்லடி படும்’ உண்மையை விளம்பினால் சிலருக்கு குர்ரிப்பாக குற்றம் உள்ள நெஞ்சிக்கு குறுகுருப்பாக இருக்கிறது பைதியக்கறான் பத்தும் போகட்டும் விட்டு விடு !
சோ,இனி கெராக்கான் காரணை காலைபிடிக்க வேண்டியது தானே,குத்தகை சண்டை வருமே.காலீட் கட்டுப்படவில்லை துரோகி ம.இ.க,கட்டுப்பட்டால் கோழை,உங்கள் ஞாயத்தை கொண்டு சம்பா பாசாவில் போடுங்கள்,ம.இ.க,வுக்கு ஓட்டு போட்டோமா,அன்வரை,ஹாடி,லிம்,மிடம் போய் கேளும்,அல்லி கொடுப்பர்,அல்லது பி.ஆர்,புத்ரா ஜெயா போகும் வரை காத்திரும்,சரிதானே,நாராயண நாராயண.