இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தொடங்கியுள்ள அரசாங்கத்தைக் குறைகூறும் படலம் குறித்து கருத்துரைக்க விரும்பவில்லை.
“நான் எதுவும் சொல்லாதிருப்பதே நல்லது. நான் சொல்வதை மகாதிர் தப்பாக புரிந்துகொள்ளக் கூடும்.
“ஏனென்றால், முன்னாளிலிருந்தே நான்தான் மகாதிரின் முதல் ‘நம்பர்’ பொது எதிரியாக இருந்து வருகிறேன்”, என்றாரவர்.
ஆனாலும், 23 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் என்பதால் அவர் சொல்வதைக் கேட்டு வைக்கலாம்.
“அவர் சொல்வது ஏற்கத்தக்கதா, செய்யத்தக்கதா என ஆராய வேண்டும். அதுதான் முக்கியம்”, என்றார்.
மகாதிரின் முதல் ‘நம்பர்’ பொது எதிரியாக இருந்து வந்தாலும், இன்னமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடிவது, ஆச்சர்யம் அளிக்க வைக்கிறது. பிறகு எப்படி அன்வர் இப்ராகிம் முதல் ‘நம்பர்’ பொது எதிரி இல்லையா? புரியவில்லை. அம்னோவின் அரசியல் விளையாட்டுகள்.
நஜிப் சர்ச்சையில் குதிக்க கேஜே மறுப்பு,அப்படி மீறி குதிச்சா ஆப்பு