பிகேஆர் உதவித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நுருல் இஸ்ஸா அன்வார், அரசியலில் மகளிர் மறுமலர்ச்சி தேவை என்று கூறியுள்ளார்.
“பெண்கள் தலைவர்கள் ஆவது அந்நியமானது, கூடாத செயல் என்று நினைப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
“அதைவிட மோசமாக சிலர், சமய வாதங்களை முன்னிறுத்தி பெண்கள் தலைவர்களாவதைத் தடுக்க முனைகிறார்கள்” என இன்று காலை பிகேஆர் மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைக்கையில் நுருல் இஸ்ஸா கூறினார்.
பிகேஆர், அதன் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை சிலாங்கூர் மந்திரி புசாராக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் அதற்கு பாஸ் உள்பட பல தரப்பினரின் எதிர்ப்பு தெரிவிப்பதும் தெரிந்ததே. இந்நிலையில் நுருல் இஸ்ஸா இவ்வாறு பேசியுள்ளார்.
அவர்களுடைய பிற்போக்குத்தனத்தை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல! இருந்தாலும் நம் நாடு ‘பரவாயில்லை’ இரகம்.
இன்றுதான் யோசித்தேன் எங்கப்பா மகளை காணவில்லை யென்று,பாஸ் சுல்தானை ஆதரிக்கும்,பி.கே.ஆர்.டி.ஏ.பி,ஆதரிக்காத கட்சி இருந்தும் சுல்தான் எப்படி இவர்களை ஆதரிப்பார்.புதுமையை புகுத்த,போராட வேண்டும்.பல தியாகம் செய்யவேண்டும்,ஜெயில் கம்பியை பிடிக்கவேண்டும்.ஐனா தலையிட வேண்டும்.அப்படியானால் ஹிந்துவை எம்.பி,பிரதமராக்குங்கள் அப்போது நம்பலாம் சம உரிமையென்று,ஹ ஹ ஹ,நாராயண நாராயண.
தினக்குரல் பத்திரிக்கை சுடும் உண்மைகளின் ஒரு பகுதி – மந்திரி பெசார் பதவி காலிட்டுக்கு மட்டும் சாசனமில்லை!
கெஅடிலானின் பல ஆரம்பக் காலத் தலைவர்கள் அம்னோவில் மீண்டும் இணைந்து விட்டப் போதிலும், கெஅடிலான் துணைத்தலைவர் அஸ்மின் அலி மட்டும் இன்னும் அன்வாரின் தீவிர ஆதரவாளராகக் கட்சியில் இருந்து வருகிறார்.
அது -கொள்கை பிடிப்பு, பல விதப் போட்டிகளுக்கும், உள் மற்றும் வெளிச் சக்திகளின் சூழ்ச்சிகளுக்கும் இடையில் – தேசியத் துணைத் தலைவராக அஸ்மின் தேர்ந்தெடுக்கப் பட்டது அவரின் துடிப்புமிக்க தலைமைத்துவத் தகுதிக்கு உறுப்பினர்களின் அங்கீகாரம்.
ஆனால் காலிட், அஸ்மினை ஆட்சிக்குழுவில் சேர்த்துக் கொண்டால் தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்றே அவரை ஓரம் கட்டி வந்தார். இப்பொழுது கட்சித்தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிசாவிற்கும் வழிவிட மறுத்தது காலிடின் சுயநலப் பதவி வேட்கை.
பதவி விலகலில் அவர் காட்டும் பிடிவாதம், தனக்கு பின் பக்காத்தான் இருக்கக் கூடாது என்ற மனப்பான்மையை காட்டுகிறது. கடனோடு பக்காத்தானுக்கு வந்தவர், எப்படியோ கடனை அடைக்க கெடிலான் ஒரு வாய்ப்பு வழங்கி விட்டது. அதற்கு பாரிசானுக்கு வழங்கும் பரிசு. சிலாங்கூர் மாநில ஆட்சியா? ஒரு
பெண் நாடாள முடியாத?
பாஸ் இந்த முடிவுக்கு வர இரண்டு முக்கியக் காரணம் முதலாவதாக மதம். பெண் மந்திரி பெசார், இரண்டு பைபிள். விவகாரத்தை, தன் பதவியைத் தற்காத்துக் கொள்ள காலிட் பயன் படுத்திக் கொண்ட விதம்.
அதில் அரண்மனையைத் திணித்து, இஸ்லாமியத் தீவிரவாதப் பிரிவு, மற்றும் பாரிசான் ஆதரவு பத்திரிக்கை மூலம் தன்னை ஒரு இஸ்லாமிய போராட்டவாதியாகி விட்டார்.
ஒரு ஜனநாயக நாட்டில் அரசச் சடங்கைக் விட பல முக்கிய மக்கள் பணிகள் மந்திரி பெசாருக்கு உண்டு என்பதை அறியாதவரா அரசர!. இப்படிப்பட்ட அசௌகரியங்களைத் தவிர்க்க துணை மந்திரி புசார் பதவி உண்டு. .
எங்கும் எதிலும் பெண்கள் என்று ஆகி விட்ட யுகத்தில் பெண்களின் பதவியேற்பைத் தடுப்பவர்கள் அரசியலில் செல்லாக்காசாகி விடுவார்கள்.
உலகில் ஆண்கள் சந்திக்க முடியாததை, பல பெண் தலைவர்கள் வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளனர். இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் மீது போர்தொடுத்து பல அரபு நாட்டு ஆண் தலைவர்களை அசர வைத்தவர் கோல்டா மேயர்.
இந்தியாவின் பெண் சிங்கம் இந்திர காந்தி, இந்தோனிசியா, பாகிஸ்தான், பங்களா தேசம் போன்ற பெரிய இஸ்லாமிய நாடுகளில் அதிபராகவும், பிரதமராகவும் பெண்களை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனால் இங்குள்ள பிற்போக்குவாதிகளின் கூட்டம் பெண் என்பதால் ஏளனமாகப் பேசினாலும், உள்ளூர மலேசியப் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கண்டு பீதியடைந்திருப்பதாகவே தோன்றுகிறது. ஆதலால் பெண்கள் தலைமைத்துவத்தைத் தவிர்கவே அன்வார் குடும்பப் பின்னணியை முன் நிறுத்துகிறார்கள்.
தன் கணவர் சிறையில் இருந்த பொழுதும் கெஅடிலான் அமைப்பு காலம் தொடங்கி, பல இன்னல்களின் ஊடே கட்சியையும், குடும்பத்தையும் கட்டிக்காத்து வந்துள்ள டத்தோ ஸ்ரீ வான் அஸிசா, நாடாளுமன்ற \ சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் பரந்த அனுபவத்தைப் பெற்றவர். மக்களால் எளிதில் அணுகக் கூடியவரும், ஏழை மக்களின் உணர்வுகளைப் புரிந்து மதிக்கும் தன்மை கொண்டவர்.
மாநிலத்தில் அவரின் தேர்வு மலேசிய அரசியலிலும் புதிய அலையை உருவாக்கும் என்பதால், தேசிய அரசியலில் பக்காத்தானின் எதிரணியிலுள்ளவர்களும் டத்தோ ஸ்ரீ வான் அஸிசா சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக வருவதைத் தவிர்க்க விரும்புகிறார்கள்.
இன்றைய நவீன யுகத்தில் இனியும் தனி மனித தாண்டவம் அவசியமில்லை! பக்காத்தான் உண்மையாக நீதியுடன் மாற்றத்தை விரும்பினால் கூட்டுத் தலைமைத்துவ அணுகுமுறையால் மாநிலத்தை மட்டுமல்ல நாட்டையே வளைகளாம், பெண்கள்!
தலிபான் கொள்கைகளை பின்பற்றும் தலைவர்களையும், சமயவாதிகளையும், அந்த கொள்கைகளை 57 வருடமாக கடை பிடித்துவரும் UMNO -வையும் புறகணித்து, மலேசிய மகளிர் புதிய புரட்சியை ஏற்படுதுவீர் !!! வாழ்த்துக்கள் !!!
சாயா அனக் மலேசியா சாயா கத்தா பெறேம்புவான் பொலெஹ் ஜாடி மந்திரி புசார் திடாக் சலாஹ் …மலேசியா பொலெஹ் பெறேம்புவான் பொலெஹ்.
உங்கப்பா உங்களை காஜங் இடை தேர்தலில் வெற்றி பெற செய்து. உங்களை மந்திரி பெசரா ஆக்கியிருக்கலாம், எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எல்லாம் சுமுகமாக முடிந்துருக்கும்.
மஞ்சுவின் தெளிவான கருத்துக்கள், மலேசியா இளைங்கர்களின் அரசியல் முதிற்சியை வெளிபடுத்துகிறது. பாராட்டுக்கள்.
“பெண்” என்னும் ஒரே காரணத்தால் தலைமைப் பதவியை வகிக்க தகுதி இல்லை என்று சொல்ல எந்தக் கொம்பனுக்கும் தகுதி இல்லை. காரணம் மலேசிய அரசியலமைப்பு சாசனமே அதற்கு தற்காப்பு அரண் கொடுத்துள்ளது. இதையும் அறியாது அறிவிலிகள் செயல்பட்டால், இந்த நாட்டின் அரசியல் சாசனம் அம்போதான்!.
சாயா அன்னாக் மலேசியா,போலேக்கா புக்கான் மெலாயு ஜாடி எம்.பி,பி.எம்.ஹ ஹ ஹ,நாராயண நாராயண.
நியாமில்லை என்றால் கொலையும் செய்வாள் பத்தினி ..பத்மினிகளாவது வளரட்டும்.பத்து பிரச்சனைகள் கலையட்டும் பார்ப்போம்.?பாராட்டுகள்.
பெண் வரகூடாதா கேட்கும் மக்கள் ஏன் தன் இனம் ஹிந்து வரகூடாதா யென்று கேட்க மாட்டேங்குது,கூலிவேலை கூஜா தூக்கியே பழகிப்போச்து என்னச்செய்ய,நாராயண நாராயண.
வலிக்காமல் வாழ்க்கை இல்லை ……..
காயி. அவர்களே , நாராயணன் என்ன உங்கள் பக்கத்துவீட்டு மச்சானா ? அடிக்கடி
கூப்பிட்டுகொல்கிரீர்கல் ! இடம் ,பொருள், ஏவல் தெரிந்து பேச -எழுதப்பழகுக !
மற்றவர்களுக்கு எரிச்சலை எட்படுத்தாதிர் . நாராயணன் பேரை நாரடிக்கவேண்டாம் .
I
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானட………….!
தேனீ தங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டும் …
மஞ்சு good கருத்து
சிவராஜ் தங்களை நானறியேன். தங்கள் மின்னஞ்சலை செம்பருத்தி வழி தெரியப் படுத்தினால் தொடர்பு கொள்வோம்.
முசுடு,கண்ணை திறந்து படிக்கவேண்டும்,அறிவை கொண்டு யோசிக்கவேண்டும்.மனதுக்கு கொண்டுசெல்லக்கூடாது உணர்ச்சி வசப்படகூடாது.நான் கேட்டதில் என்ன தவறு,பி.ஆரில் நம்மவர் அங்கம் வகிப்பது எதற்க்கு ?,நம்மவர்க்கு நன்மைபயக்க.பெண் எம்.பி ஆகலாம் யென்று கேற்கும்போது,ஏன் நம்மவர் எம்.பி,ஆக கேட்ககூடாது,தவரா சொல்லுங்கள்.இதுக்கு நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது ஏன் ?,அவன் நடவாது தெரிஞ்சு முயல்கிறான் ஏன் நாம் கூடாது.இவர்களை ஆதரிக்க நிற்கும் நீர்,நீங்கள் ஒரு தீர்மானம் கொண்டு செல்லுங்கள் எத்தனைபேர் ஆதரிப்பர் பாருங்கள்.யாம் நாராயண புகழ் பாடுவது உமக்கு எங்கே நோகுது,பிறர் நம்பிக்கையில் தலையிடுவதை நிறுத்துங்கள்,அது யாவர்க்கும் நன்மை,வாழ்க நாராயண நாமம்.
முசுடு, ஐயா, ஆடு நனைகிறது என்று ஓநாய் (காய்) ஒப்பாரி வைக்கிறது .
யாமும் இருமுறை பி.ஆருக்கு ஓட்டு போட்வா தெரியுமா,முதல் முறை ஹின்ராப் சொன்னதால் போட்டேன் இரண்டாம் முறை சுல் கிப்ளி ஒழிய போட்டோம்.வாழ்கையில் இருமுறையே ஓட்டுப்போட்டோம்,யாறையும் நம்பி வாழ்ந்து பழக்கமில்லை.கே.எப்.சி,க்காக,ஆட்டிறைச்சிக்காக,வேட்டி துண்டுக்காக போட்டதில்லை ஓட்.ஹின்ராப் எம் இடத்தில் நின்றிறுந்தால் பி.என்னுக்கு போட்டிறுப்பேன்.என்றும் எம் ஓட்டு ஹின்ராப் கை காட்டியவர்கே,நாம் ஒருமுறை யாறையேனும் ஆதரித்துவிட்டால் கடைசிவறை துணை நிற்போம்.வளர்க ஹின்ராப் வாழ்க நாராயண நாமம்.