பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் எம்பி ஆவதற்கு எஞ்சியுள்ள ஒரே தடை அரண்மனைதான். சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா-வின் அங்கீகாரம் கிடைத்தால் அவர் எம்பி ஆகி விடலாம். சுல்தானின் அனுமதி கிடைக்குமா?
இதை மலேசியாகினி வான் அசிசாவிடம் கேட்டதற்கு, சுல்தானுக்கென சொந்த “விருப்பங்கள்” இருக்கலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
என்றாலும், சுல்தானின் விருப்பம் குறித்து எந்த ஒரு அனுமானத்துக்கும் வர அவர் தயாராக இல்லை.
“நம் மாநிலத்துக்கு ஓர் ஆட்சியாளர் இருக்கிறார். அவர் நன்கு கல்வி கற்றவர். அவருக்கென விருப்பங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.
“அரசமைப்பின்படி பெரும்பான்மை இடங்கள் வைத்திருப்பவரே மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். இதையும் துவாங்கு கவனத்தில் கொள்ள வெண்டியிருக்கும்”,என வான் அசிசா கூறினார்.
அசிசா எம்பி ஆவதில் சுல்தானுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுவது பற்றி வினவியதற்கு, அவ்விவகாரம் பற்ரி சுல்தானைச் சந்திக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார். மேலும், சுல்தான் வெளிப்படையாக அப்படி எதுவும் சொல்லவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
என்னய்யா சொந்த விருப்பங்கள் என்று பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். யார் ஒருவருக்கு பெரும்பான்மை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிகின்றனரோ அவரையே முதல்வராக நியமிக்க மட்டுமே சமஸ்தானதிபதிக்கு சட்டம் இடம் தருகின்றது. இங்கே அவருக்கு கொடுக்கப் பட்டிருப்பது ‘discretionery power’ மட்டுமே. “There is NO absolute discretionery power. It is contradictory in terms” என்று சொன்ன முன்னாள் தலைமை நீதிபதியாகவும், சமஸ்தானதிபதியாகவும் இருந்தவர், இறந்து விட்டார். ஆகையால் சமஸ்தானதிபதியின் விருப்பு வெறுப்புகளுக்கு சட்டத்தில் இடமில்லை என்று அரசியல்வாதிகளுக்கே தெரியாமல் பதில் சொல்லுவதைப் பார்த்தால்…………………
அப்புறம் ஏன்னா ம…..க்கு தேர்தல் வக்கிறேங்க ,,,
நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் படி சுல்டானோ பேரரசரோ முடிவு செய்ய முடியாது. பெரும்பான்மை அரசியல் கட்சி முன்மொழிந்த்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும் இல்லையேல் குறிப்பிட்ட நாட்களில் அது தானாக ஏற்றுக்கொள்ளப் படும். இப்போது ஏனோ புது குருடா விடுகிறார்கள்.
MB நியமனத்தில் சுல்தான்களின் அதிகாரம் குறித்த நிலையில் அம்னோ, பாஸ் கட்சிகளின் நிலைப்பாடு உறுதி இல்லா ஒன்றாக இருக்கிறது. ஏன் இந்த சந்தர்ப்பவாதம்?! பேராக்கில் முன்பு பாஸின் நிலை எப்படி இருந்தது? சுல்த்தானின் முடிவே இறுதியானது என்று சொல்லி சும்மா இருந்ததா…?! திரங்கானுவில் முன்பு அம்னோ
நிலை எப்படி இருந்தது? இடத்திற்க்கு தகுந்து நிறம் மாறும் பச்சோந்திகள். கொள்கையாவது, உறுதியான நிலைப்பாடு ஆவது?! எல்லாம் சுயநல சுரண்டல்.
12,என்.ஜி.ஓ,கள் திரண்டு அரண்மனையிடம் மனுகொடுத்தனர்,காலீட் எம்.பி,யாக தொடரவேண்டும்.காலீட் தகுதியானவர்,சிலாங்கூரில் இருப்பு ஆர்.எம் 3.2 பில்லியன் தகுதியற்றோர் கைகளில் சேர்ந்தால் வீனாகிவிடும் போன்று.அரண்மனையின் அதிகாரி காடிர் என்பவர் பெற்றுக்கொண்டதாக செய்தி,வாழ்க நாராயண நாமம்.
இந்த மாநில மந்திரி புசார் விவகாரத்தில் சரியான , நியாயமான , முறையில் மாநில மன்னர் செயல் படவில்லஎன்றால்; நாறப்போவது , மன்னர் புகழ் தான்.