தோக்கியோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசிய விமான நிறுவன(எம்ஏஎஸ்)த்துக்குச் சொந்தமான எம்எச்70 விமானத்தின் “பாதுகாப்பு” பற்றி சந்தேகம் எழுந்ததால் அது கோலாலும்பூருக்கே திரும்பி வந்தது.
அவ்விமானம், காலை மணி 10.50க்கு கேஎல்ஐஏ-இலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட 50வது நிமிடத்தில் விமானி, விமானம் திரும்புவது பற்றி அறிவித்தார் எனப் பயணி ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கோலாலும்பூரில் இறங்கியதும் பிற்பகல் மணி 1.15க்கு வேறொரு விமானத்தில் தோக்கியோவுக்குச் செல்லலாம் எனப் பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
ஏம்பா! இப்படி எங்களைப் பயமுறுத்திறீங்க!
மாஸ் என்றால் மக்கள் காத தூரம்ஓடும் நிலை ஆகிவிட்டதே!
தொலைகாட்சியில் வரும் தொடர் நாடகங்களைபோல், அடிக்கடி MAS விமானம் பாதுகாப்பு கருதி தரை இறங்கினால், MAS நிறுவனம் பாதுகாப்பில் மிகவும் அக்கறையோடு செயல் படுகிறது என்று உலகத்திற்கு காட்டி கொள்ள நினைக்கிறதோ என்று தோன்றுகிறது.