வாருங்கள், பக்கத்தானில் இணையுங்கள், மகாதீருக்கு குலா அழைப்பு

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 23, 2014.

Kula shockedமுன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, பிரதமர் நஜிப்பை கடுமையாக விமர்சித்து வருவதாலும் அம்னோவின் நடவடிக்கைகள் மீதும் அவருக்கு மிகுந்த ஏமாற்றமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாலும் அவர் தாரளமாக உண்மை பேச விரும்பும் பாக்காத்தான் ராக்யாட் கட்சிக்குள் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம்.

அவர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் பாக்காத்தான் ராக்யாட்டின் உச்ச மன்ற தலைவர்களின் முடிவைப் பொறுத்ததாகும்.

அப்படி அவர் விண்ணபித்தால் நான் அவருக்கு சிபாரிசு செய்ய காத்திருக்கின்றேன்.

இது என்னுடைய சொந்தக் கருத்தாகும்.

அம்னோ கட்சியும் அவர் கருத்து சொல்வதற்கு ஏதுவாக எந்த ஒரு தளத்தையும் வழங்க முன் வராத போது, பாக்கதான் ராக்யாட் கட்சியை ஒரு தளமாகக் கொண்டு அவர் அரசாங்கத்தையோ நஜிப்பையோ தாராளமாக விமர்சிக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பேராளர் தேர்வுக்கு போட்டியிட்ட பொழுது அவரது தொகுதி வேட்பாளார்களே அவரை தேர்ந்தெடுக்கவில்லை என்பது நினைவு கூறத்தக்கது.

அம்னோவில் அவர் ஒரு செல்லாக் காசாக இருப்பதாக நான் அறிகிறேன்.

அவர் என்ன சொன்னாலும் அதை எதிர்கத்தான் செய்கிறார்களே தவிர அவருக்கு ஆதரவாக யாரும் பேசுவது போல் தெரியவில்லை.mahathir1

நஜீப்பை நான் பதவி இறங்கச் சொல்லவில்லை ஆனால் திருத்திக் கொள்ள சொல்கிறேன் என்று மகாதீர் கூறினார்.

அவரின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அம்னோவின் செயலாளர் துங்கு அட்னான், மகாதிர் அப்படிப் பேசுவது அழகல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மகாதீர் ஏற்கனவே அம்னோவிலிருந்து துங்குவால் வெளியாக்கப்பட்டவர் என்பது தெரிந்த ஒன்று. அதைத்தொட்டு பேசிய அவர் அப்பொழுது தான் உண்மையைப் பேசியதால் துங்கு தன்னை கட்சியிலிருந்த்து நீக்கிவிட்டார் என்று கூறினார்.

ஆகவே, அவர் சொல்லுக்கு மரியாதை அம்னோவில் இல்லாமல்போய்விட்டது.

வீணே அக்கட்சியிலிருந்து அக்கட்சியையும் அதன் தலைவரையும் சாடிக்கொண்டிருப்பதை விட்டு விட்டு, பாக்கதான் ராக்யாட் கட்சியில் இணைந்துவிட்டால் அவர் இஷ்டம் போல் நஜீப்பையோ அம்னோவையோ விமர்சனம் செய்யாலாம்.

அதற்கு முழுமயான ஒத்துழைப்பை பாக்தான் வழங்கும் என்ற நம்பிகை எனக்கு இருக்கிறது.

அவர் உண்மைகளைப் பேச துணிந்து விட்டதால் அவருக்கு நிச்சயம் அம்னோ கட்சி ஒத்துழைப்பு தராது. உண்மையான, நியாயமான கொள்கைகளை உடைய பாக்தான் ராக்யாட் கட்சியே அவருக்கு ஏற்றது என்று நான் நினைக்கிறேன்.