நஜிப் சர்வாதிகாரியல்ல, முகைதின் யாசின்

 

MNMகடந்த வாரம் பிரதமர் நஜிப் ரசாக்கை முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கடுமையாகச் சாடியிருந்தார். இச்சாடல் அவரை பதவியிலிருந்து அகற்றும் முயற்சியாக இருக்கக்கூடும் என்ற கருத்து பலரால் தெரிவிக்கப்பட்டது.

நஜிப்பை பல தலைவர்கள் தற்காத்து பேசினர். ஆனால், துணைப் பிரதமர் முகைதின் யாசின் மட்டும் மௌனம் காத்தார்.

இன்று, முகைதின் யாசின் தமது மௌனத்தைக் கலைத்தார்.

உத்துசான் மலேசியா செய்தியின்படி, அரசாங்கம் மகாதீரின் கடிந்துரையையும் அவரது ஆலோசனைகளையும் திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளது என்று முகைதின் யாசின் கூறினார்.

மேலும், பிரதமர் நஜிப் ஒரு சர்வாதிகாரி அல்ல என்று முகைதின் அவரை தற்காத்துப் பேசினார். மகாதீர் அவரது ஆட்சிக் காலத்தில் அவ்வாறு வர்ணிக்கப்பட்டார்.

அமைச்சரவையுடன் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்கும் நடைமுறையை நஜிப் பின்பற்றினார் என்றாரவர்.