காலிட் நாளை சுல்தானைச் சந்திக்கிறார்

meetசிலாங்கூர்  மந்திரி  புசார்(எம்பி)  அப்துல்  காலிட்  இப்ராகிம், தமது எம்பி  பதவி  பற்றி  முடிவு செய்ய  நாளை  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷாவைச்  சந்திப்பார்.

சில  வாரங்களுக்குமுன்  பிகேஆரிலிருந்து  நீக்கப்பட்ட  காலிட்  சுயேச்சை  எம்பி-ஆக  செயல்பட  அளித்து வந்த  ஆதரவை  பாஸ்  மீட்டுக்கொண்டதால்  உருவாகியுள்ள  நெருக்கடிக்குத்  தீர்வுகாண  சுல்தான்  தம்  வெளிநாட்டுப்  பயணத்தைச்  சுருக்கிக்கொண்டு  முன்கூட்டியே திரும்பி  வந்தார்.

எப்போது  சுல்தானைச்  சந்திப்பார்  என்று  காலிட்டிடம்    வினவியதற்கு  “நாளை  மாலை” என்றார்.