2012-இல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அவமதித்த குற்றச்சாட்டை மறுத்த பேராக்கின் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் நிஸார் ஜமாலுடின் அதற்கெதிராக விசாரணை கோரினார்.
அரிதாகவே பயன்படுத்தப்படும் குற்றவியல் சட்டம் பகுதி 500-இன்கீழ் அவர்மீது கிறிமினல் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், சங்காட் ஜெரிங் சட்டமன்ற உறுப்பினரான அவருக்கு ஈராண்டுச் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
2012, ஏப்ரல் 23-இல், ஈப்போ, தாமான் தேசா பக்கத்தானில், பொதுமக்களிடம் உரையாற்றியபோது நஜிப்பை அவமதிக்கும் வகையில் பேசியதாக நிஸார்மீது குற்றம் சாட்டப்பட்டது.
நீதிமன்றம் அவரை ரிம4,000 பிணையில் விடுவித்தது. அவர்மீதான வழக்கு செப்டம்பர் 26-இல் விசாரணைக்கு வரும்.