சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைச் சந்தித்த பின்னர் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தெரிவித்த எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், சுல்தானை பேட்டி காண அனுமதி கேட்டு பிகேஆர் கடந்த வாரம் கடிதம் அனுப்பி வைத்ததாகக் கூறினார்.
“அரண்மனையும் கடிதம் பெற்றுக்கொண்டதை முறைப்படி தெரியப்படுத்தியுள்ளது. துவாங்கு முதலில் எம்பி-யைப் பார்ப்பார் அதன்பின்னர் வான் அசிசாவைச் சந்திப்பார்”, என்றாரவர்.
ஆனால், எப்போது என்பது அவருக்குத் தெரியவில்லை.
அரசமைப்பின் சாசனப்படி இந்த எதிர்ப்பார்ப்பு நியாயமானதே!! கொன்சிதுய்சென் மொனார்க்கியா அல்லது எப்சோலியுத் மொனார்க்கியா என்பதே தற்போதைய சூழ்நிலை! பொறுந்திருந்து பார்ப்போம்.!!!
Nallathu nadakum
சுல்தான் சுல்தான்…………………..