பாஸ் வான் அசிசாவை ஆதரித்து சத்திய பிரமாணங்களில் கையெழுத்திடாது

musசிலாங்கூரின்  13  பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்களும், சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலுக்கு  ஆதரவாக  சத்திய பிரமாணங்களில் (எஸ்டி)  கையெழுத்திட  மாட்டார்கள்.

இன்று இதை  உறுதிப்படுத்திய  பாஸ்  தலைமைச்  செயலாளர்  முஸ்தபா அலி, சிலாங்கூரின்  புதிய  எம்பியை  முடிவுசெய்யும்  பொறுப்பை  சிலாங்கூர்  அரண்மனையிடமே  விட்டு  விடுவதாகக்  கூறினார்.

வான்  அசிசாவுக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  சத்திய  பிரமாணத்தில்  கையெழுத்திட  அதன்  சட்டமன்ற  உறுப்பினர்களை  அனுமதிக்காது  என்று  பாஸ்  கூறியது  13 பேருக்குத்தான்  பொருந்தும்.

அதன்  சட்டமன்ற  உறுப்பினர்களில் இருவர்-  ஸாஆரி  சுங்கிப்பும் (உலு  கிள்ளான்)  ஹஸ்னுல்  பஹாருடினும் (மோரிப்)-  சத்திய  பிரமாணத்தில்  ஏற்கனவே  கையொப்பம்  இட்டிருக்கிறார்கள்.

எனவே, இவ்விருவரையும்  சேர்த்தாலே  வான்  அசிசாவுக்கு  சட்டமன்றத்தில்  56-க்கு 30  எனத்  தேவையான  பெரும்பான்மை  கிடைத்து  விடும்.