கிள்ளான் எம்பி அலுவலகத்தில் திருடர்கள் கைவரிசை

mpகிள்ளான்  எம்பி  சார்ல்ஸ்  சந்தியாகு  அலுவலகம்  சூறையாடப்பட்டிருக்கிறது.

காலை மணி  10.30-க்கு  தம்  அலுவலகக்  கதவு  உடைக்கப்பட்டிருப்பதைக்  கண்டதாக  சந்தியாகு  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“நூறு  ரிங்கிட்டைக்  காணோம். முக்கியமான  ஆவணங்களை எல்லாம்  சரிபார்க்கிறோம். அவற்றில்  எதையும்  திருடிச்  சென்றார்களா  தெரியவில்லை”, என்றாரவர்.

இரண்டாவது  தடவையாக  தம்  அலுவலகம்  கொள்ளையிடப்பட்டிருப்பதாக  சந்தியாகு கூறினார். இதற்குமுன்  2010-இல்  அது  உடைக்கப்பட்டிருந்தது. உடைத்தது  யார்  என்பது  இதுவரை  தெரியவில்லை.

இதை அரசியல்  சம்பந்தப்பட்ட  சம்பவமாக  அவர்  கருதவில்லை.