நெகிரி செம்பிலான் முன்னாள் மஇகா தலைவர் டி.இராஜகோபாலு இன்று காலமானார். அவருக்கு வயது 63.
”நேற்றிரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து என் தந்தையை சிரம்பான் மாவார் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றோம். அதிகாலை 3.27க்கு அவர் காலமானார்”, என அவரின் மகன் தினாளன் கூறினார்.
ஒரு வழக்குரைஞரான இராஜகோபாலு முன்னாள் மஇகா தலைமைச் செயலாளருமாவார். ஜெராம் பாடாங், போர்ட் டிக்சன் சட்டமன்ற உறுப்பினராகவும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.
ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது சேவை மறக்க முடியாதது.
ஆழ்ந்த அனுதாபங்கள்!!! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!!!!
அவரின் குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
மன்னிக்கவும்.எனக்கு வருத்தம் தெரிவிக்க மனம் இல்லை. நல்லதை மக்களுக்கு நிறைய செய்தாலும் அது மனதை நிறைப்பதில்லை. நிறைவதும் இல்லை. ஆனால் மக்களுக்கு செய்த தீங்கு இன்னும் மனதில் பசுமை மாறாமல் இருக்கும். சிலர் மரிக்கும் போது ஐயோ நல்லவன் போய்ட்டானே.. கடவுளுக்கு கண் இல்லையானு தெய்வத்தை நிந்திக்க மறுப்பதில்லை. அதுவே மக்களுக்கு மக்களின் பிரதிநிதிகள் செய்யும் திகுடு தாளம் அவர்களின் மனதை புண்படுத்துவதோடு அவர்களின் சாபமும் பெற்றுக் கொள்ள மறுப்பதும் இல்லை…. அதுவே இறந்து போனதும். என் வயிதெரிச்சல் அதான் சாமி கூலி கொடுதிருச்சினு சொல்லுவாங்க.இதுலே இரண்டாவதாக சொன்னதுதான் இப்போதைக்கு பொருந்தும்.எங்க ஊருலே கேட்டுப் பாருங்க அவரை இறந்து தூற்றும் வாய்கள் நிறையவே உள்ளன.நிலத்தை கையகப் படுத்துவதில்…. எங்கள் கோவில் நிலத்துக்கு நடையாய் நடந்து ஒன்றும் நடக்காமல்.. கடைசியில் நிலத்தின் உரிமை பெற்ற செல்வாக்கு மிக்க சீனரே கோவிலுக்கு 5 ஏக்கர் நிலம் கொடுத்து அந்த நிலத்தில் பாதியை ‘ ஆட்டை போட” நினைத்து தோற்றுப் போன பாதகத்தன்.கெட்டவன் செத்தும் நல்லவன் ஆகமுடியாது. நெகிரிவாசி
அதனால் தான் எனது அனுதாபங்களைத் தெரிவிக்க முடியவில்லை. வேண்டாமே அதற்கு மேல்!
abraham thare இப்படி உயிரோடு இருக்கும் போதும் நாம் பீசா மறுக்கிறோம் செத்ததும் ” நல்லவன்னு” முத்திரை குத்தி அனுப்பி வைக்கிறோம். எனக்கு ஒன்று விளங்கவில்லை அது இப்படி கெட்டவன் செத்ததும் நல்லவன் ஆகிறான்? இந்த மனுஷன் எபபடி அரசியலுக்கு வந்தான் என்ன தில்லாலங்கடி பண்ணினான்னு நெகிரிலே ரொம்ப ஜனங்களுக்கு தெரியும். இன்னமும் எனக்கு ஆத்திரம் அடங்க வில்லை. மொத்தத்திலே எல்லாரும் மக்கள் குடியை கெடுக்கிற கூத்தாடி அரசியல்வாதிகக்காகதான் இருக்கிறார்கள்.
யார் சொர்க்கம் போவாருன்னு தெரிஞ்சிக்குவோம்.
ஹிட்லர்,ஹிடி அமின்,ஒசாமா இறந்துவிட்டார்கல் அவர்களும் நல்லவராரர்கலா????????
பல அரசாங்க அலுவலக ஊழியர்களுக்கு அவர்களின் மனதறிந்து நடந்த ஒரு நல்ல நண்பனின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். எல்லோருடைய எண்ணத்திலும் நீயிருப்பாய். ஆத்மா சாந்தியடையட்டும்.
சொர்க்கம் ,நரகம் எல்லாம் மனிதனின் கற்பனையில் உருவான கதைகள் ,சொர்கத்திற்கு போயிட்டு வந்த எவனாவது உங்களிடம் சொர்க்கம் ,நரகம் இப்படி இருக்கும்
என்று சொன்னான் ,எல்லா மதவாதிகளும் மக்களை பயமுறுத்த சொன்ன கட்டு கதைகள் , நமக்கு 6 அறிவு இருந்தால் மாற்றவர் சொன்னதில் உண்மை இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும் ,மாயை உலகை விட்டு
நிஜ உலகிற்கு வாருங்கள் , செத்த பிறகு சொர்க்கம் சென்று ரம்பா ,ஊர்வசிகளுடன் நடனம் ஆட ஆசை படதே ,அப்படி அழகான பெண்களுடன் நடனம் ஆட வேண்டும் என்றால்
புப்புக்கு போ ,அல்லது உண்மையான சொர்கத்தை காண வேண்டும் என்றால் உன் தாயின் காலடியில் காணலாம் .
Theni சார் tamil biththan னுக்கு உங்கள் மேல் எதோ ” காண்டு” ( விரோதம்) போல….” ஊரே பத்தி எரியுது: இந்த மனுஷன் நடுவிலே பூர்ந்து நாயனம் வாசிக்கிறாரு….!!! ரொம்ப அறிவு மழுங்கிகள் இந்து மதத்தை அறியாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தப் பட வேண்டிய விஷயம். நாங்க மட்டும் சுவர்க்கம் இருக்கு நரகம் இருக்குன்னு வாதாடவா வந்தோம்….!!! ஆறறிவு உள்ள உங்களுக்கு சொர்க்கம் என்பதில் நம்பிக்கை இல்லைதானே. அப்புறம் எப்படி தாயின் காலடியில் சொர்க்கம் இருக்குன்னு நம்புறீங்க? தாயின் காலடியில் போய் தேடினால் நீங்கள் சொல்வது போல ரம்பா மேனகா ஊர்வசி இவர்களுடன் ஆடின பாக்கியம் கிடைக்குமா? அல்லது இரவு விடுதியில் அழகான விலைமாதர்களுடன் ஆடின இன்பம் கிடைக்குமா? என்ன பேசுறீங்க? எங்களாலும் நக்கலா பேச முடியும்….??? விஷயம் எதுவோ அதை விட்டுவிட்டு வீறு எதுக்கோ நூல் பிடிக்கிறீர்கள். அடுத்த மதத்துக்காரன் சொன்னது எல்லாம் எடுபடும். நாம ( இந்து மதம்) சொன்னா அது ஆறு அறிவுக்கு அப்பால் பட்டது. கருமம்..டா. என்ன கொடுமை Theni சார் இது?
சொர்க்கம் மதுவிலே, சொறிநாய் நடுவிலே. அப்புடின்னு என் நண்பர் அடிக்கடி பாடுவார். மது விடுதிலே தமிழ் பித்தன் அதைத்தான் பார்க்கமுடியும். பார்த்த ஞாபகம் இல்லையோ?. இறந்தவர் எவ்வாறு வாழ்ந்திருப்பினும் அவரவர் வினைப்பயனை அவ்வுயிர் அனுபவத்தே தீரும். ஆதலால், நாம் நல்லது சொன்னாலும், கெட்டது சொன்னாலும் நடப்பது நடந்தே தீரும். அன்னாரின் உயிர் சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்.
“தாயின் மடியில் தலை வைத்திருந்தால், துயரம் தெரிவதில்லை”. இதைச் சொன்ன கவிஞனின் காலடியைத் தொட்டு கும்பிடலாம். நினைவு படுத்திய தமிழ் பித்தனுக்கு நன்றி.
சீர்திருத்தவாதி என்றாலே அவர்களின் குருவை போலவே – பிராமணன் போன்ற நாகரீகமில்லாமல் பேசுவார்கள் பார் என எனது நண்பர்களிடம் சவால் விட்டு இந்த பகுதிக்கு வந்தேன்..உங்களின் எழுத்துக்களை படித்து நான் சொன்னதை நம்பினார்கள்..தொடருங்கள் உங்கள் ‘நாகரீக பேச்சுக்களை ..
கவிஞரின் கவிதையா,கவிதைக்கு மறு பெயர் பொய் என்று தெரியாதோ.பாடல்கூட பாடியிறுக்கின்றனர் கவிதைக்கு பொய் அழகு யென்று யாரோ ஒரு கவிஞர்,நாராயண நாராயண.
இதே ராஜகோபாலு அவர்கர்களால் மறுக்க பட்ட உதவி (5 குழந்தைகளுக்கு பிறப்பு பத்திரம் எடுக்க உதவுவது), என் நண்பர் சண்முகம், ஒரு சாதாரண காலேஜ் மாணவராக இருந்த பொழுது, எடுத்து தந்தார் ! எழுத படிக்காத வர்களிடமும் , ஏழைகளிடமும் இறக்கம் படைத்தவர் நண்பர் சண்முகம். அவரை ஒப்பிடும் பொழுது, ராஜகோபாலு மறைவிற்கு, என்னால் வருத்தம் தெரிவிக்க முடியவில்லை. மன்னிக்கவும், நானும் மனிதன் தான், எனக்கும் கோவம் தாபங்கள் வரும். ஆனால் சாமீ வேலு மக்களை எமாற்றிய நாடகத்தில், ராஜகோபளுவுக்கும் கணிசமான பங்கு உண்டு என்று நினைக்கும் பொழுது, என்னால் ராஜகோபலுவின் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்க இயலவில்லை !
நன்றி dhilip 2 அவர்களே…!!! உண்மை உறங்கும் .. எப்படி ஆனாலும் அது ஒருநாள் மக்கள் வழி வெளிபட்டே தீரும். போகும்போது என்ன கொண்டு போகப் போகிறோம். இருக்கும் வரை யாருக்காவது உபயோகமாக இருக்க வேண்டும்
வாழ்க நல்ல மனங்கள் ! ஜனநாயகமும் கடவுளும் ஒன்று ! ஜனநாயகத்தை நம்புங்கள் ! மக்கள் திலகத்தின் திரை பட பாடல்கள்தான் நினைவுக்கு வருகிறது.
“ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகடும்மே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கடுமே”