காலிட் ஊழல்வாதி என பிரச்சாரம் செய்வது முறையல்ல

psmசிலாங்கூர் மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமுக்கு  சட்டமன்றத்தில்  பெரும்பான்மை  இல்லை  என்பதால்  அவர்  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  விலகுவதுதான்  சரியானது  என்பதை  ஒப்புக்கொள்ளும்  மலேசிய  சோசலிசக்  கட்சி(பிஎஸ்எம்)  அவருக்கு எதிராக  குறை  சொல்வதாக  இருந்தால்  அதை  முறைப்படி  செய்ய  வேண்டும்  எனவும் அவருக்கு  எதிராக  நடவடிக்கை  எடுப்பதாக  இருந்தால்  அதையும்  சட்டப்படியே  செய்ய  வேண்டும்  என்றும்  வலியுறுத்தியுள்ளது.

காலிட்  ஊழல்  செய்தார்  என்ற  செய்தியை நலாபுறமும்  பரப்பிவிட்டு, பின்னர்  அவருக்கு  காரணம்கோரி கடிதம்  அனுப்புவது  “முறையற்றது”  என  பிஎஸ்எம்  தலைவர்  முகம்மட்  நசிர் ஹஷிம்  கூறினார்.

“இது பக்கத்தான்  நிர்வாகத்துக்கு  ஒரு  மோசமான எடுத்துக்காட்டாக  அமைகிறது”, என்றாரவர்.