புதிய திருப்பத்தினால் பாஸ் தலைவர் கவலை

mujaசிலாங்கூர்  மந்திரி  புசார்  சர்ச்சையில் நேற்றைய  பாஸ்  கூட்டத்தின்  முடிவால் புதிய  சிக்கல்  உருவாகலாம் என்று  கவலையுறுகிறார்  அதன்  மத்திய குழு  உறுப்பினர்  முஜாஹிட்  யூசுப்  ராவா.

நேற்று  நடந்த பாஸ்  மத்திய  குழு கூட்டத்தில், மந்திரி  புசார்  பதவிக்கு  யாரையும்  பரிந்துரைப்பதில்லை என்றும் நடப்பு  மந்திரி  புசார்  அப்துல் காலிட்  இப்ராகிமுக்குப்  பதில்  புதிய மந்திரி  புசாரை  முடிவுசெய்யும்  பொறுப்பை  சுல்தானிடமே  விட்டு  விடுவது  என்றும்  தீர்மானிக்கப்பட்டது.

இதன்  விளைவாக இவ்விவகாரத்தில் பக்கத்தான்  ரக்யாட் கட்சிகளுகிடையில்  ஒருமித்த கருத்து  இல்லை  என்ற  முடிவுக்கு  சுல்தான்  வரக்கூடும்  என  முஜாஹிட்  கூறினார்.

“நாம்  என்ன  முடிவு  செய்தாலும் அது பக்கத்தானை  வலுப்படுத்துவதாக இருக்க  வேண்டும். ஒரே  மாதிரியாக  இருக்க  வேண்டும். ஆனால்,  அது நடப்பதாக  தெரியவில்லை”, என்று  அந்த பாரிட் புந்தார்  எம்பி  கூறினார்.

நேற்றைய  கூட்டத்தில்  முஜாஹிட், வெளிநாடு  சென்றிருந்ததால், கலந்துகொள்ளவில்லை.

கலந்து  கொண்டிருந்தால்  முன்பு  எடுத்த  முடிவைத்தான்  பின்பற்ற  வேண்டும்  என்பதை  வலியுறுத்தியிருப்பாராம்.