சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் நேரத்துக்கு ஒரு பேச்சு பேசுவதைக் கண்டு கடுப்பாகியுள்ள மாநில டிஏபி பக்கத்தான் ரக்யாட் தொடர்ந்து இருக்கத்தான் வேண்டுமா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்றிரவு சிலாங்கூர் டிஏபி-இன் அவசரக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டிருகிறது.
“பாஸ், அது கொடுத்த வாக்குறுதியை மதிக்காமலும் பங்காளிக் கட்சியின் தலைவர் புதிய எம்பி ஆவதற்கு ஆதரவு கொடுக்க பிடிவாதமாக மறுப்பதையும் பார்க்கையில் கூட்டணி தொடர்வது தேவைதானா என்று யோசிக்க வேண்டியுள்ளது”, என மாநில டிஏபி தலைவர் டோனி புவா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஆனால், இவ்விவகாரம் தொடர்பில் அக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் புவா கூறினார்.
ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன். இடைத்தேர்தல் ஏற்பட வாய்ப்புக்கள் பிரகாசம் என்று. தற்போதைய மாநில அலுவலர்கள் தங்களது ஆபீஸ்களை காலி செய்து வீட்டுக்கு புறப்படுங்கள். இடைத்தேர்தல்களுக்கு தயாராகுங்கள்.
பாகத்தான் ராக்யாட் தேவை அனால் பச்சை வெள்ளை(பாஸ்)தேவை இல்லை காரணம் நேரத்துக்கு ஒரு பேச்சி, தேர்தலுக்கு ஒரு பேச்சி ,டி எ பி,பி கே ஆர் வேணுமா ஆனா வான் மந்திரி புசார் ஆவதை சத்திய பிரமாணத்தில் கையெழுத்து இடாதாம் இது என்ன அம்புலிமா விளையாட்டா விளையாடுற நேரமா இது ஒருத்தருடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளாத கச்சி பாஸ் தேவை இல்லை……
இடை தேர்தல் நடந்தால் பஸ் கட்சிக்கு சாவு மணி அடிக்க படுவது உறுதியாகி விடும்
பாஸ் கட்சியை விடுத்து (விட்டால்) பிற கட்சிகள் பக்காத்தானில் இணைய காத்திருக்கின்றன. எனவே, இனியும் தாமதிக்காமல் பாஸ் கட்சியை இப்பவே ‘மரியாதையாக’ வெளியே அனுப்புவது அதிபுத்திசாலித்தனம். பாஸ் கட்சியை தலையில் சுமந்து கொண்டு பக்காத்தானை வலுப்படுத்துவது முடியாத காரியம். மத்தியில் ஆட்சியைப் பிடித்தபிறகு பாஸ் கட்சி இவ்வாறெல்லாம் நடந்துகொண்டால்….நிலைமை என்ன ஆகும் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இப்போதே – அதாவது பெங்காலான் குபோர் இடைத்தேர்தலில் பாஸ் கட்சிக்கு பக்காத்தான் ஆதரவு தராவிட்டால் பாஸ் கட்சி தானே தோண்டிய புதைகுழியில் குப்புறவிழுந்து மண்ணைக் கவ்வப்போவது திண்ணம். எனவே, இப்போதே பாஸ் இல்லாத பக்காத்தானை வலுப்படுத்த வேண்டும். 14-வது பொதுத் தேர்தல் நெருங்குபோது இது பற்று யோசிக்கலாம் என்றால்…அது டூ லேட்….பாரிசானுக்கே சாதகமாகி விடும்.
ஒரு பெண் மாநில மந்திரி பெசார் ஆவதை இந்தப் பழமைவாதிகள் விரும்ப மாட்டார்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஆனாலும் இவர்கள் மாற வேண்டிய கட்டாயம் வரும்!
அரசியலுக்கு தகுதியில்லா கட்சிபோல் பாஸ் தன்னை காட்டிக்கொள்கிறது!!! டோனி புவா, நீர் மட்டுமல்ல மக்களின் கருத்தும் அதுவே!!! இழப்பு பக்காத்தானுக்கு ஒருபுறமிருக்க பேரிழப்பு பாஸ் கட்சிக்கே!!!!
எல்லாம் பதவி வெறியும் ஆசையும் இவனுங்க உருப்பட மாட்டாங்க
ப்ருஷன் பொஞ்சாதி அரசாங்க பணத்த திருடி தின்ன நாய பேய அலையிரங்க நீங்க எல்லாம் அவங்களுக்கு சபோட் பண்ணுங்கட என்னக்கு PKR கட்சிக்கு உண்டி போடு வெறுத்து போச்சி நாய் மாதிரி கடிச்கிரங்க
பாஸ் கட்சி உறுப்பினர்களை நம்பலாம். அதன் ஒருசில மேலவை உலாமா தலைவர்களை நம்ப முடியாது. இஸ்லாம் என்பது வெறும் வார்த்தையில்தான் இவர்களுக்கு.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
பாஸ் கட்சியை பாக்காத்தானிலிருந்து உடனே வெளியேற்றுங்கள்.
இடுக்கண் வருபோது உதவா நட்பு எதற்கு ?தூக்கி எறியுங்கள் பாஸ் கட்சியை !வேலியே பயிரை மேய்ந்த கதை!!!!!!!
பசுத்தோல் போர்த்திய புலியின் சாயம் வெளுத்து விட்டது. ஹடியின் முதுகில் குத்தும் பேரம் வெட்ட வெளிச்சமாகிய பின்னும் பாஸ் கட்சியின் உறவு மக்கள் முன்னணிக்குத் தேவையா?. நம்பிக்கைத் துரோகத்திற்கு தகுதியானவரா ஒரு மதவாத கட்சியின் தலைவராக இருக்க முடியும்?. யாரோ சொன்னாங்க பாஸ் கட்சி நீதியும் நேர்மையும் வழுவாத கட்சியின்னு. இதுதான அந்த இலட்சணம்?. இப்ப அரசியலில் யார் சோரம் போனது என்று வெட்ட வெளிச்சமாகி விட்டதல்லவா?.
ஏன் தாமதம் பாஸ் கட்சியை வெளியேற்ற வேண்டியது தானே,முடியும் ஆனால் முடியாது.இப்போது உள்ள 30 அடுனில் 18 புக்கான் மெலாயூ,10+2 மெலாயு மாத்திரமே.சுல்தான் ஒத்துக்கொள்வாரா,பின்பு பேராக் நிலவரமே வாழ்க நாராயண நாமம்.
அசிசாவை ஏன் அன்வாரின் மனைவியாய் பார்க்க வேண்டும்?? பி கே ஆர் கட்சியின் தேசிய தலைவி என்ற முறையில் அல்லவா அவர் பெயர் முன்மொழியப்பட்டது? எந்த விதத்தில் அவருக்கு தகுதி இல்லை எம் பி ஆக?? தக்க காரணமின்றி நடக்கும் இழுபறிக்கு யாது காரணமோ?? குள்ளநரி குழப்பவாதிகளுக்கு நல்ல பாடம் கற்பிக்க இஜோக் சட்டமன்ற உறுப்பினரின் பெயரையும் சமர்ப்பிக்கலாம். இன்னும் மூன்று ஆண்டுகள்தானே, வேண்டுமென்றால் ஆச்மின் பெயரையும் இணைத்துக்கொள்ளலாம். அண்மையில் தலைவர் ஐரோப்பாவுக்கு விடுமுறையில் சென்றிருந்ததாக கேள்வி!!! அங்கு யாரைச் சந்தித்தாரோ?? ஏதேனும் அரசியல் சதித்திட்டம்?? ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!
பாஸ் கட்சியில் உள்ள சில பிற்போக்கு வாதிகளினால்தான் பகதானுக்கு இடர் .
தெழிவு,சுல்தான் வான் வேண்டாம் சொல்லியும் அன்வருக்கு ஏன் பிடிவாதம்.பி.ஆர்,கூட்டனியில் தகுதியானவர் கிடையாதோ. வெளிச்சம் என்னவென்றால் எம்.பி,விவகாரம் அன்வர் செய்த சூழ்ச்சி.நடு மணிதனாய் தலைவனாய் நின்று யாருக்கு தகுதி இருக்கிறதோ அவரை தேர்ந்தெடுப்பதுதானே மான்பு தரும் செயல்.வான் ஏற்கெனவே கட்சியை விட்டு வெளியேறியவர்,சிலாங்கூர் வாசி கிடையாது.நிறைய காரணம் இருந்தும் ஏன் அன்வர் அசீசாவை முன் நிறுத்தவேண்டும்.எதற்கு பிடிவாதம்.தனிப்பட்ட முக்கியத்துவம் ஏன்.கேள்வி வருகிறதே,நாராயண நாராயண.
எல்லாம்…கட்டிக்கிட… அரசியல் …
2 அல்லது 3 பெயர்களை முன்மொளியப்படவேண்டுமென்று மாநில அரசமைப்பில் சொல்லப்பட்டுள்ளதா?? யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவரைத்தானே தேர்ந்தெடுப்பது அரசமைப்பின் நிலை. திடீர் திடீரென்று காளான் பூத்த மாதிரியா அரசமைப்பு சட்டம்?? சுல்தான் எம்பியை தெர்ந்தெடுப்பதென்றால் பிறகு ஏன் தேர்தல், மக்களாட்சி, ஜனநாயகம்??
சிற்றெரும்பு, உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். அரசியல் முதிர்ச்சியுடன் மறைமுகமாகவும் மண்டைக்கு மணி அடிக்கும் விதத்திலும் கூர்மையான உங்கள் கருத்து சிந்திக்கச் செய்கிறது. வாசகர்களுக்கும் பயனளிக்கிறது…தொடரட்டும்…