குதப்புணர்ச்சி வழக்கை ஒளிபரப்பலாம், நீதிமன்றம் அனுமதித்தால்

shabபிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின் குதப்புணர்ச்சி  வழக்கின்  மேல்முறையீடு  கூட்டரசு  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது  அதை  நேரடி  ஒளிபரப்புச்  செய்வதில்  பிரச்னை  எதுவுமில்லை  எனத்  தொடர்பு, பல்லூடக  அமைச்சர் ஷபரி  சிக்  கூறினார்.

“ஆனால், நீதிமன்றம் நேரடி  ஒளிபரப்புக்கு  ஒத்துக்கொள்ள  வேண்டுமே”, என்று  கூறிய  அமைச்சர்  இதற்குமுன்  நீதிமன்ற  வழக்கு  நேரடி  ஒளிபரப்புச்  செய்யப்பட்டதில்லை  என்றார்.

நீதிமன்றம்  அனுமதித்தால், அதை  ஒளிபரப்புவதில்  ஆர்டிஎம்-முக்குத்  தடையில்லை  என்றும்  ஷபரி  குறிப்பிட்டார்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை,  பிகேஆர் துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி,  அன்வாரின்  குதப்புணர்ச்சி  வழக்கை  நேரடியாக  தொலைக்காட்சியில்  ஓளிபரப்ப  வேண்டும்  எனக்  கூறியிருந்ததற்கு ஷபரி  இவ்வாறு  பதிலளித்தார்.