டிஎபி, பிகேஆர்: எம்பி பதவிக்கு அஸிசாவின் பெயர் மட்டுமே தாக்கல் செய்யப்படும்

 

PKR-Aziza only for MBகாலிட் இப்ராகிமுக்கு மாற்றாக சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் வான் அஸிசாவின் பெயரை மட்டுமே டிஎபி மற்றும் பிகேஆர் முன்மொழியும்.

இம்முடிவு பக்காத்தான் கூட்டணியின் மூன்று கட்சிகள் ஒவ்வொன்றும் சிலாங்கூர் சட்டமன்ற பிரதிநிதிகளிலிருந்து “இரண்டு மேற்பட்ட பெயர்களை” முன்மொழிய வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் விடுத்துள்ள ஆணைக்கு முரணாக இருக்கிறது.

கடந்த 13 ஆம் பொதுத் தேர்தல் முடிவுற்ற இரு நாள்களுக்குப் பின்னர் மே 7 ஆம் தேதி அரண்மனையிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் சுல்தான் நான்கு பெயர்களை தாக்கல் செய்யுமாறுPKR-Aziza only for MB1 கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், இக்கடிதத்திற்கு எதிர்வினையாற்றிய மூன்று பக்கத்தான் கட்சிகளும் ஒரு பெயரை மட்டுமே தாக்கல் செய்திருந்தன.

ஆகவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த அரசியல் சம்பிரதாயப்படி டிஎபியும் பிகேஆரும் இம்முறையும் வான் அஸிசாவின் பெயரை மட்டுமே முன்மொழியும்.

“பிகேஆரும் டிஎபியும் சுல்தானியின் ஆணையை ஏற்றுக்கொண்டு பக்கத்தான் 2013 ஆம் ஆண்டில் பின்பற்றிய சம்பிரதாயத்திற்கு ஏற்ப வான் அஸிசாவின் பெயரை பெயரை முன்வைக்கும்.

“மாநில சட்டமன்றத்தில் வான் அஸிசாவுக்கு குறைந்தபட்சம் 30 உறுப்பினர்களின் ஆதரவு, வான் அஸிசா உட்பட, இருக்கிறதால் (இம்முடிவு எடுக்கப்படுகிறது)”, என்று அவர்கள் கூறினர்.

இந்த அறிக்கை பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியான் மற்றும் சிலாங்கூர் டிஎபி தலைவர் டோனி புவா ஆகியோரால் வெளியிடப்பட்டது.

சிலாங்கூர் சுல்தானும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதே அரசியல் சம்பிரதாயப்படி “இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களை” தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர் சுல்தானிடம் தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும் என்று தற்போதைய மந்திரி புசார் காலிட் இப்ராகிம் தெரிவித்தார்.

பாஸ் என்ன செய்யப் போகிறது?

சுல்தானின் ஆணையை பாஸ் “ஏற்றுக்கொள்கிறது” என்று அக்கட்சி உடனடியாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால், இவ்விவகாரத்தை சுல்தானிடமே விட்டுவிடுவதாகவும், பாஸ் எவரின் பெயரையும் முன்வைக்காது என்றும் பாஸ்சின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறினார்.

ஓர் உடன்பாடு ஏற்படாததால் கடுமையான விவாதத்திற்குப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டது என்று பாஸ் மத்தியக்குழு உறுப்பினர் காலிட் சாமாட் கூறினார்.