பிகேஆரும் டிஏபியும் சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை மட்டுமே நியமனம் செய்துள்ள வேளையில் பாஸ் அதன் வேட்பாளர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
“அரண்மனையிலிருந்து கடிதம் இன்னும் வரவில்லை, விரைவில் வரலாம்”, என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி கூறினார்.
கடிதத்தைப் பார்த்த பின்னரே முடிவு செய்யப்படும் என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பாஸ், கட்சி ஆள்களை எம்பி பதவிக்குப் பரிந்துரைக்குமா என்று வினவியதற்கு, “இப்போதைக்கு பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை (எம்பி வேட்பாளராக) நியமிப்பதில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு”, என்றாரவர்.
எதுவும் நடக்கலாம் பி கே ஆர்,டி எ பி ஜாக்கிரதை கடைசியில் நாற்காலி உங்களுக்கு சொந்த மில்லாமல் போகலாம்…நன்பேண்டா
தேருஸ் பிளிஹன் கேசில் பாகாத் BN கே ?
உங்களின் நிலைப்பாடு படும் பாடைதான் நாட்டு மக்களே அறிவார்களே ? சுல்தான் அவர்கள் அழைப்பு விடுவார் ,அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றுதானே காதுக்கொண்டிருகிறீல்கள் ! உங்களின் இந்த ஆடு புலி ஆட்டம் தெரியாதவன் யாருமில்லை. வாழ்க உங்களின் தில்லு முள்ளு !