நெகாரா கூ இயக்கக் குழு தலைவர் ஜைட் கமருடின், அது பதிவு செய்யப்படாத அமைப்பு என்று கூறப்படுவதன் தொடர்பில் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யைச் சந்தித்து அதன் நடவடிக்கைகள் பற்றி விளக்கியுள்ளார்.
நேற்றுக் காலை நெகாராகூ புரவலர் அம்பிகா ஸ்ரீநிவாசனுடன் ஜைட் ஆர்ஓஎஸ்சைச் சந்தித்தார்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜைட், நெகாராகூ ஒரு இயக்கம்தானே தவிர ஒரு சங்கம் அல்ல என்பதை ஆர்ஓஎஸ்ஸுக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறினார்.
நாட்டுப் பண் பெயரையே நெகாராகூ கொண்டிருந்தாலும் குழப்பத்தையோ சர்ச்சையையோ உண்டாக்கும் நோக்கம் அதற்கில்லை என்றாரவர்.
நெகாராகூ என்பது மக்களின் இயக்கம். நீதி, சமத்துவம், அமைதி ஆகியவற்றுக்காக போராடும் 80 அரசுசாரா அமைப்புகள் (என்ஜிஓ) அதில் அதில் இடம்பெற்றுள்ளன.
ஊகூம்…! இதெல்லாம் கறிக்கு உதவாது!
இது தேவை மக்களே,இனரீதியாக ஏற்படும் பிரச்சனையை தீர்க்கவே ஏற்பாடு செய்யப்பட்ட அமைப்பே நெகாராகூ,வாழ்த்துக்கள் வாழ்க நாராயண நாமம்.