எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு வேட்பாளர்கள் நியமனம் செய்வதில் பக்கத்தான் ரக்யாட் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு பெயரைத்தான் முன்மொழிய வேண்டும் என்று ஆகஸ்ட் 17-இல் பக்கத்தான் தலைமை மன்றம் செய்த முடிவைப் பின்பற்றுமாறு பாஸ் கட்சியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மந்திரி புசார் பதவிக்கு மூன்று பெயர்களை முன்மொழியப் போவதாக பாஸ் கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அன்வார் இவ்வாறு கூறினார்.
“தலைமை மன்றம் செய்த முடிவில் அடிப்படையில்தான் பேசுகிறேன். அக்கூட்டத்துக்கு மூன்று கட்சித் தலைவர்களும் வந்திருந்தனர். எனவே அந்த முடிவே இறுதியானது என நினைக்கிறேன்”, என்றாரவர்.
பக்கத்தான் உறுதியாக இருக்க வேண்டும், இவ்விவகாரத்தால் பிளவுபட்டு விடக் கூடாது எனவும் அன்வார் குறிப்பிட்டார்.
பாஸ் இரண்டு டூன்களை எதற்கு களவாடினாய்,நாராயண நாராயண.
தானா சேர்ந்த கூட்டம் தவற சொல்லாதிங்க .