பக்கத்தான் ரக்யாட்டில் தெளிவான கொள்கை இல்லாததும் அதில் உள்ள கட்சிகள் சுயநலத்துடன் செயல்படுவதும்தான் இன்றைய சிலாங்கூர் அரசியல் நெருக்கடிக்குக் காரணம் என அம்னோ எம்பி ஷம்சுல் அனுவார் நசாரா கூறினார்.
“சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் ஒவ்வொரு பக்கத்தான் கட்சியும் பொதுநல நோக்கின்றி சுயநலத்துடன் செயல்படுவதுபோல் தெரிகிறது. இதனால்தான் அவர்களால் அவ்விவகாரத்துக்கு ஒரு தீர்வு காண முடியவில்லை”, என ஷம்சுல் அம்னோ வலைத்தளத்தில் கூறினார்.
பிகேஆர், டிஏபி, பாஸ் ஆகியவை பக்கத்தான் நோக்கங்கள் வெற்றிபெற பாடுபடவில்லை, தன்னலத்துடன்தான் செயல்படுகின்றன என லெங்கோங் எம்பி-ஆன ஷம்சுல் குறிப்பிட்டார்.
இந்நெருக்கடி, பக்கத்தானை வழிநடத்துவதில் அன்வார் இப்ராகிம் தோற்றுப்போனார் என்பதைக் காண்பிப்பதாகவும் அவர் கூறினார்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் .. அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ..
57 வருஷமாய் UMNOPUTRA -க்கள் வளமாகவும் செல்வசெழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் தோட்டப்புறங்களில் வாழும் மலாய்காரர்கள் இன்றும் UMNOPUTRA -க்களிடம் கையேந்தி பிச்சை கேட்கும் நிலையில் உள்ளனர். மலேசியாவில் யார் சுயநலவாதிகள் என்று உலகத்திற்கே தெரியும்.