நிக் நஸ்மி: தலையை வெட்டுவேன் என்றவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

nikஅரசாங்கம் பக்கத்தான்  ரக்யாட்  தலைவர்களுக்கு  எதிராக  தேச நிந்தனைச்  சட்டத்தைப்  பயன்படுத்தும்போது  பாஸ் எம்பிகள்  நால்வரின்  தலையை  வெட்டப்  போவதாக  மிரட்டிய பெர்காசா  தகவல்  பிரிவுத் தலைவர்  ரஸ்லான்  காசிமுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்காலிருப்பது  ஏன்  என்று  பிகேஆர்  இளைஞர்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக் அஹ்மட்  கேட்கிறார்.

“பிஎன், ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா), பெர்காசா ஆகியவற்றின்  தலைவர்கள் குற்றவியல்  தன்மை  கொண்ட  அறிக்கைகளை  வெளியிட்டிருக்கிறார்கள். எந்த  நடவடிக்கையும்  எடுக்கப்பட்டதில்லை”, என்றாரவர்.

தேச நிந்தனைச்  சட்டத்தை அகற்றும்படியும்  பக்கத்தான் தலைவர்களுக்கு  எதிராக  அச்சட்டத்தைப்  பயன்படுத்துவதை  நிறுத்தும்படியும் நிக்  நஸ்மி பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கேட்டுக்கொண்டார்.,

“ஜூலை  2012-இல்  தேச  நிந்தனைச்  சட்டம்  அகற்றப்படும்  என்ரு  நஜிப்  அறிவித்தார். இரண்டாண்டுகள்  ஆயிற்று, அது  வெற்று  வாக்குறுதியாகத்தான்  தெரிகிறது”, என்றவர்  சொன்னார்.