பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் அம்னோவுடன் சேர்ந்து சிலாங்கூரில் ஒற்றுமை அரசை அமைக்கும் முயற்சியில் கமுக்கமாக ஈடுபட்டார் என்ற செய்தி பாஸ் உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து. அதன் விளைவாக அவருக்கு கட்சியில் எதிர்ப்பு உருவாகியுள்ளது, இந்த எதிர்ப்பு வலுவடைந்து அவரது பதவிக்கே முடிவு கட்டிவிடலாம்.
ஹாடி, சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்குக் கொடுத்து அதன்வழி அஸ்மினுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களை பாஸ் கட்சிக்குத் தாவ வைத்து, போதுமான உறுப்பினர்கள் சேர்ந்ததும் அம்னோவுடன் சேர்ந்து ஒற்றுமை அரசை அமைக்க திட்டமிட்டார் என்பதை அறிந்து பக்கத்தான்- ஆதரவு பாஸ் தலைவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இத்திட்டம் அம்பலமானதும், ஹாடி, தம் அரசியல் செயலாளர் அஹ்மட் சம்சுரி மூலமாக அதை வன்மையாக மறுத்தார்.
ஆனால், மத்திய குழுக் கூட்டத்தில் அம்னோவுடன் இணைந்து பணியாற்ற கமுக்கமாக திட்டமிட்டதை ஹாடி ஒப்புக்கொண்டார் என பாஸ் வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
திங்கள்கிழமை கூட்டத்தில், பல தலைவர்கள் ஹாடியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டதாகவும், இன்னும் சிலர் தலைவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்தி உண்மையென்றால் கடவுள் இருகின்ரார் எதை,எப்போது செய்ய வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும்…கதம்
பாக்கத்தான் சொன்ன படி ஆடினால் அவர் நல்லவர் …. பக்காதான் சொல்லுவதை கேட்கவில்லை என்றால் அவர் அம்னோ வுக்கு உதவுகிறார் என்பதா…. என்ன அரசியல் நாடகம் ……
பக்காத்தான் குடையின் கீழ் அமர்ந்து எடுத்த ஒருமிந்த முடிவினை புறக்கணித்து தன்னிச்சையாக முடிவு எடுப்பதென்றால் இதை என்னவென்று சொல்வது? எவ்விதத்தில் ஏற்றுக்கொள்வது?? இதே மக்களின் தற்போதைய கேள்வி!!! இன்று இரண்டு அல்லது மூன்று பெயர்கள் கொடுக்க சம்மதிப்பீர். நாளை எனக்கு பிடித்தவர் பெயரை மட்டுமே கொடு என்று சொன்னால்??? அதற்கும்போதிமாடுபோல் தலையாட்டப் போகிறீரா?? அரசமைப்பு சட்டம் என்ன சொல்கிறதோ அதையே மதித்து ஜனநாயகத்தின் உரிமையை தற்காப்பதே நலம். மாநில அரசமைப்புக்கேற்றவாறு மக்களின் ஜனநாயக தேர்வினை சுல்தானிடம் முறையுடன் கொண்டுச் செற்றால் நிச்சயமாக ஆளுநர் ஏற்றுக் கொள்வார். இதுவரை சுல்தான் இதற்கு முரண்பாடு காட்டியதில்லை!!!! மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் நமது சுல்தான்…
ஆமாம் சிற்றெரும்பு நீங்க சொல்லுவது சரி..
பாலைவத்தில் ஒட்டகங்கள் மேய்க்க மட்டும் போதிய அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் அவர்கள் தகுத்திக்கு மீறி ஓர் அரசியல் கட்சியில் தலைமைத்துவம் வகித்தால் இப்படிதான். ஒவ்வொரு மூடியையையும் அதற்குப் பொருத்தமான சாடியில்தான் வைக்கவேண்டும். யூசுப் ராவா, பாசில் நோர் ஆகிய 2 நல்ல நேர்மையானவர்களுக்குப் பிறகு 2002ல் இவர் pas-குத் தலைமை ஏற்றத்தில் இருந்து இன்றுவரை இந்த குளறுபடி முல்லாவிற்கு முன்னுக்குப் பின் முரணான பெடூயின் மனோபாவந்தான்.
அவரே கவிழ்ந்து விடுவார்! யாரும் கவிழ்க்க வேண்டாம்!
விலைபோன வீணர்களுக்கு நினைவிருக்கட்டும் …,வாழும்
காலம் எண்ணப்படும் சமயம் இது !!!
எவனும் ஆண்டாண்டு காலம் வாழப் போவதில்லை !
இழுத்துப் பறித்துக் கொண்டு சாகாமல் இருக்க தர்ம வழியை
அனுசரியுங்கள்!!!
காலீட்டை வீழ்தியது ஞாயமானால் மறு தேர்தலை தாராலமாய் வரவேற்கலாமே.வாழ்க நாராயண நாமம்.
50 மில்லியன் மக்கள் வரிப்பணம் விரயமாக வேண்டுமா???? இப்பெருந்தொகையில் 50 சிறந்த மருத்துவர்களை உருவாக்கிவிடலாம்.!!!!!
நாராயண நாராயண.
மலேசியன் ஐயா, நீங்கள் குறிப்பிடும் கடவுள் பேராக்கில் ஏதும் செய்தாரா?
சாரே,இதுமாதிர சமயத்தில் கேட்டால் தான் ஏதாவது கிடைக்க வாய்ப்பு உண்டு,செலவு செய்வர் வரட்டும் தேர்தல்.நீதியே வெள்ளும் நீதி தவறி காலீட்டை பதவி நீக்கம் செய்து இருப்பின்,மக்கள் நிச்சயம் பாடம் கற்பிப்பர்,வாழ்க நாராயண நாமம்.
எதுவய்யா ஒருகுடையின் கீழ் எடுக்கப்பட்ட முடிவு.பாஸ் காலீட்டுக்கு ஆதரவு கொடுத்த பின்னும் கட்சியை விட்டு தூக்குவதா,இரண்டு அடுனை எஸ்.டி,மூலம் எழுதி வாங்கியதா.பின் நானே(பி.கே.ஆர்) அதிக டுன் வைத்துள்ளதாக மார்தட்டிகொள்வதையா.அரண்மனையை அவமதிப்பது பெரியோர் செயல் அல்ல மான்பும் அல்ல.பாஸ்ஸும் வும்னோவும் சேர்ந்தால் மகாதீர் காலம்போல் அன்னியரில்லாத சுய மலாய் ஆட்சி நடக்கும்,எதிர்கட்சியோ முஸ்லீம் அல்லாதோர் மட்டுமே இருப்பர்,பலம் இழந்த வீர்யம் இழந்த கட்சியாக தேவையா தோழர்களே.பின் விழைவையும் யோசிக்க வேண்டும்,வாழ்க நாராயண நாமம்.
இந்த உன்னத உத்தமர் பேராக் எம்பீ சிக்கலின் போது கொண்ட நிலைப்பாடு வேறு. இப்ப செலாங்கூரில் கொள்ளும் நிலைப்பாடு வேறு!!1 அங்கு அரண்மனைக்கு எதிர்ப்பு. இங்கு அதற்கு சாமரம் வீசுதல்.. என்னே இவரின் கொண்ட கொள்கைப் பிடிப்பு?! சாதாரண secular அரசியல் கட்சி தலைவர் என்றால் புரிந்துகொள்வோம். அவர்களுக்கு நிலைக்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றுவது இயல்பு. இவர் மதத்தை முன்வைத்து இயங்கும் ஒரு கட்சி தலைவர்…!!! இப்படியா முன்னுக்குப் பின் முனாபிக் ஆக இருப்பது?!
வகுக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியில் அமைதியாக நிம்மதியாக வாழ்வதே நல்ல குடிமகனுக்கு அழகு.விரண்டாவாத போக்கினை விடுங்கள்,அனுசரித்துபோகும் தன்மையை சிந்தித்து செயல்படுங்கள்,போக்குவரத்து சட்டத்தில் ஏன் பெர்ஹாத்தி ஹாத்தி டி ஜாலான் ராயா என்று கடைசியாக சொல்லப்படுகிறது,நாம் தான் உண்டாங் உண்டாங் படித்துவிட்டாமே யென்று சொல்லமுடியுமா.ஜே.பி.ஜே,மண்லோரி,மணல்லோரியை ஏன் விரட்டி விரட்டி பிடிக்கிறான்,சொந்தமா கார் வைத்திருப்பவர்க்கே புரியும் காரணம்.அதுபோல் எல்லா சட்டங்களும் நாட்டுக்கும் மக்களுக்கும் அரணே.மதித்து நடக்கப் பழகி கொண்டால் எல்லோறுக்கும் நன்மையே,வாழ்க நாராயண நாமம்.
முதியவர்கள் இளைஞர்களுக்கு வழி விட்டு, விலகி செல்வதே மேல் ! காலம் மாறுது, PAS சின் இளைஞர் பிரிவினர்களுக்கும் மிதவாத கருத்து மேலே உயருது. அவர்களிடம் நம்பக தன்மை தெரியுது ! வழிவிடுங்கள் மூத்த அரசியல் வாதிகளா …..
ஒரு குடையின் கீழ் என்பது பக்காத்தான் மேலவை முடிவு. பி கே ஆர் முடிவல்ல.. எம் பி மாற்றத்தின் காரணத்தை புரிந்தும் புரியாததுபோல் கருத்துரைத்தால், தலைமேல் தண்ணீர் ஊற்றினாலும் சங்கீதம் வராது அன்பரே!!!!