பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மட், பாஸ் அவரை சிலாங்கூர் மந்திரி புசாராக நியமனம் செய்ய விரும்புவதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆனால், தம் ஆதரவு கட்சித் தலைவருக்குத்தான் என்றாரவர்.
“சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு என் பெயரைப் பரிந்துரைத்த பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் காயாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
“ஆனால், என் ஆதரவு முழுக்க முழுக்க பிகேஆர் முடிவு செய்துள்ள வேட்பாளருக்குத்தான்….அதாவது எங்கள் தலைவருக்குத்தான்”, என்று நிக் நஸ்மி ஓர் அறிக்கையில் கூறினார்.
கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முயல்கிறது “பச்சோந்தி” பாஸ், நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
எம்பி பதிவின்னா எம்பி எம்பி குதிப்பீர்கள் என நினைத்தார்களோ!
பதவிக்கு ; பட்டத்துக்கு ; பேருக்கு ,நாற்காலிக்கு பேயாய் அலைபவன் எல்லாம் ஒரு சமயவாதியா ? புனிதமான மதத்தின் ஆடைகளை போட்டு பதவிக்காக ஏமாற்றும் பாஸ் கட்சியின் சமயவாதிகள் அய்யோகியர்கள்..நமது குருஜி நிக் அசிஸ் எங்கே போனார் ?
ரமணி,சிலாங்கூரில் பாஸ் வெற்றிபெற்றது.பாஸ் 15 டுன்னும்,பி.கே.ஆர் 14 டுன்.சொல்லுங்கள் யார் ஆட்சியமைக்க தகுதியானவர்.சூழ்ச்சி மேல் சூழ்ச்சி கடைசியாக “பாஸ் கட்சியின் இரண்டு டுன்களை திருடிவிட்டான் அன்வர்”,ஒருகால் விருப்பத்தின் பேரில் இனைவதாக வந்தாலும் அனுமதித்திருக்ககூடாது.மிக கீழ்த்தரமாக நடந்துக்கொண்டான் அன்வர்.டி.ஏ.பி,பி.கே.ஆர் தான் 30,அடுன் வைத்துள்ளனரே ஆட்சியை அமைக்கவேண்டியது தானே.முடியும் ஆனால் முடியாது காரணம் 18 மலாய் அல்லாத டுன்,12 டுன் மெலாயு.பேராவின் தலைவிதியே சிலாங்கூறிலும் ஏற்படும்.முக்கிய முடிவுகளை டி.ஏ.பி,யே எடுக்கும்,ஆகையால் சிலாங்கூர் தானா மெலாயு அந்தஸ்தை இழக்கும்.கலவரம் மூலும் பின்……,நாராயண நாராயண.
18 டுன் 12 டுன் கணக்கெல்லாம் எந்த மாநில அரசமைப்பில் குறிப்பிட்டுள்ளது?? மாநில எம் பி ஒரு மலாய்க்காரராகவும் நாட்டின் பிரஜையாகவும் இருக்கவேண்டுமென்பதே மாநில அரசமைப்பு சொல்கிறது. டுன்களின் எண்ணிக்கை விகிதம் புதிதாக காலித்தினால் சேர்த்துக்கொள்ளப்பட்டதோ???
பேஸ் பேஸ்,பேராக்கில் என்ன நடந்தது,அராஜகம் தானே நடந்தது ஏன் மீண்டும் பேராவை மீடகமுடியவில்லை,நிஜார் ஒரு மலாய்காரர் தானே.முடிவு எடுக்கும் அதிகாரமே காரணம்,சிலாங்கூரில் பாஸ் எம்.பி,யாக தேர்வு பெற்றால் டி.ஏ.பி பாஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தே ஆகவேண்டும் இல்லையேல் வும்னோவுடன் கூட்டுசேர்ந்தால் சுய மலாய்கார மகாதீர் கால ஆட்சி அரங்கேறும்,ஓ.கே,வா தோழா,நாராயண நாராயண.
சூராட் உன்தோக் சவ்டாரா லிம் கிட் சியாங்,யாகுவில் பார்கவும்,வாழ்க நாராயண நாமம்.
நிக் நஸ்மி: உமக்கு பாராட்டு