பெங்காலான் குபோர் இடைத் தேர்தல் செப்டம்பர் 25-இல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் (இசி) இன்று அறிவித்தது.
வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் செப்டம்பர் 13. தேர்தல் பரப்புரைக்கு 12 நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நூர் ஜஹிடி ஒமார் ஆகஸ்ட் 20-இல் காலமானதை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தொகுதியை பாசுக்கு விட்டுக்கொடுங்கள். அடுத்த பொதுத் தேர்தலில் செலாங்கூரில் பாசிடமிருந்து ஒரு தொகுதியை பி கே ஆர் மாற்றிக்கொள்ளலாம். பக்காத்தான் என்ற போர்வையில் ஒரு சின்ன ஆலோசனை மட்டுமே!!! வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமையே!!!
PKR அந்தத் தொகுதியை pasகு விட்டுக் கொடுக்கவில்லை என்றால் சும்மா வீணுக்கு வதங்கி காய்ந்து போகவேண்டியத்தான். pasசே இவர்களுக்கு அங்கு பெரிய குழி தோண்டும். ஆற்றலுக்கு மீறிய பாய்ச்சல் நல்லது அல்ல.
இந்த இடைத்தேர்தலில் பாஸ் மண்ணைக் கவ்வும் என்பது உறுதி. ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்கு எண்ணிக்கையைவிட பாஸ் வேட்பாளர் குறைவாகவே பெற வேண்டும். அப்போதுதான் பாக்காத்தானுடன் ஒன்றுபட்டு இணைந்து போவதுதான் நல்லது என்ற மனப்போக்கு வரும். இல்லாவிட்டால் பாஸ் கட்சியில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் ஆகிடுவான்.
சரிதான் kamapoo, அரசியல் வியூகம் வேண்டுமல்லவா??? இல்லையென்றால், மண்ணைக் கவ்வ வேண்டியதுதான்…
பி.கே.ஆர். ருக்கு இது “பொங்கல்” இல்லை!
kamapo,நக்கல்,சிற்றெரும்பு அவர்களே! பெங்காளான் குபோர் எதிர்கட்சிக்கு சாதகமான தொகுதியல்ல. 2008 பொதுத்தேர்தலில் PKR ன் ஹாசான் என்பவர் வெறும் 100 வாக்குகளில் அம்நோவிடம் தோற்றார். 2013ல் PKR ன் சஹாருன் என்பவர் 1736 வாக்குகளில் அம்னோவிடம் மண்ணைக் கவ்வினார். 8% சயாமியர்களின் வாக்குகள் பக்கத்தனுக்கு கிடைப்பது குதிரைக்கொம்பு. நல்ல ரம்மியமான தொகுதி. நிறைய சயாமிய ஆலயங்கள் கண்கொள்ளா காட்சிகள். அங்குள்ள மாரியம்மன் கோவிலின் அர்ச்சகளின் ஊதியம் மாநில அரசால் கொடுக்கப்படுகிறது. தென் கிழக்காசியாவிலேயே உயர்ந்த புத்தர் சிலை [sitting Buddha] இங்குதான் உள்ளது. Golok ஆறும் இங்கேதான் உள்ளது. ஆற்றை கடந்தால் தாய்லாந்து. நேரமிருப்பின் வாருங்களேன். அம்னோவை எதிர்த்து ஒரு பேய் நின்றாலும். அந்தப் பேயை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நான் அங்கே இருப்பென். இத்தொகுதியின் முக்கிய நகரம் Tumpat. Bye !
நன்றி சிங்கம் அவர்களே!!! நானும் எனது தொழில் காரணமாக நிச்சயமாக அங்கு இருப்பேன்!!!! வெற்றிக்கு கை கொடுப்போம்.!!!!.
நன்றி சிங்கம்..நானும் அங்கே Chabang Empat – சில காலம் வாழ்ந்தவன். ஆனாலும் பாஸ் கட்சிக்கு புத்தி வரவேண்டும் என்றால் அந்தக் கட்சி அங்கே தோற்பது மட்டும் அல்ல பெருமளவில் வாக்கு சரிவும் ஏற்பட வேண்டும்.
பாஸ் கட்சி (உலாமா) நீங்கள் நினைப்பதுபோல் பட்டம்,பதவி,பணம்,அதிகாரத்துக்கு அலையும் கூட்டமில்லை,இஸ்லாம் மதத்தை மதிப்பவர் மத்தியில் வாழ்வதே அவர்களுக்து சுவர்கம்.அரசியல் நடத்த உலாமா அற்றவர் உள்ளனர்.வாழ்க நாராயண நாமம்.