முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு அரசாங்கத் தலைவராக இருப்பவர் அடிக்கடி சுற்றுலா செல்வது பிடிக்காது என்பதால்தான் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சரமாரியாக தாக்குகிறார்.
சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசாரும் இப்போது பாஸ் உறுப்பினருமான முகம்மட் தயிப் ஹராகா டெய்லி-யிடம் இவ்வாறு கூறினார்.
“நடப்பு அரசாங்க நிர்வாகத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளதால் மகாதிர் நஜிப்பைக் குறை கூறுகிறார். அவருக்கு வேலை செய்யும் பிரதமரைத்தான் பிடிக்கும், சுற்றுப்பயணியாக இருப்பரைப் பிடிக்காது”, என்றாரவர்.
சுற்றுப்பயணம் என்கிற போர்வையில் ‘பை’ நிறைய பணத்தை அள்ளிக்கொண்டு போகும் பிரதமர்களும், முதலமைச்சர்களும் யார், எவர் என மகாதிமிருக்கு தெரியாதா என்ன? இப்படித்தான், ஒருமுறை, முன்னாள் சிலாங்கூர் முதலமைச்சர் முகம்மட் தாயிப் ஆஸ்திரேலியாவில் இருந்து ‘பை’ நிறைய பணத்தை [2.4 மில்லியன்]எடுத்துக்கொண்டு வெளியாகும்போது சுங்கச் சாவடியில் கையும் களவுமாகப் பிடிப்பட்டார். என்ன, தாயிப் அவர்களே! நான் சொல்வது சரிதானே?
சாபாவில் 40 மில்லியன் மறந்து போச்சா???
சிங்கம் நமக்கு ஞாபக மறதி அதிகம் என்று முகமட் தாயிப் நினைதுக்கொண்டிருக்கிறார்.
அண்டார்டிக்கா வரை சுற்றுப்பயணம் போனது யார்? மகாதீரா? நஜிபா? மகாதீர் பிரதமராக இருந்தபோது அவர் போகாத நாடு எது? எனக்கு நஜ்நிப் பின் துன் ரசாக்கை pidikkaathu. ஆனால் பிரதமர் நஜிப் ஓரளவு சிறந்தவரே. இவருக்கு கட்சிக்குள் பிரச்சினை. நாட்டினுள் பிரச்சினை. உலக அரங்கிலும் பிரச்சினை. ஆனால் இவர் இன்னும் எந்த அடக்கு முறையிலும் ஈடுபட்டதில்லை மகாதீர் மாதிரி. மகாதீரின் சர்வாதிகாரத்தை நாடு மறந்துவிடுமா? 3 துணைப் பிரதமர்களையும் ஒரு பிரதமரையும் கதறக் கதற பதவியில் இருந்து விரட்டியடித்தவராச்சே…துங்கு இருந்த காலத்தில் (பிரதமர்) மகாதீரின் குறைகளை எடுத்துக் கூறியபோது, ‘வாயை மூடு’ என்று சொன்னவர் இப்போது மட்டும் மற்றவர்களை குறை சொல்வது எந்த வகையில் நியாயம்… தனக்கு தனக்கு என்றால் _டுக்கு கூட ஆடுமாம்…
இல்லாமல் நாட்டின் …
அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ரத்தின சுருக்கமாக கூறியிருக்கலாமே.
மகாதிர் வானத்தை பார்த்து எச்சில் உமிழ்கிறார்.