குற்ற நிலவரம் தொடர்பாக இரண்டு எம்பிகளின் கேள்விக்கு உள்துறை அமைச்சு முரண்பாடான புள்ளிவிவரங்களைக் கொடுத்திருப்பதாக கூலாய் எம்பி தியோ நை சிங் கூறியுள்ளார்.
குளுவாங் எம்பி லியு சின் தோங்-கும் பெங்காலான் செப்பா எம்பி டாக்டர் இஸானி உசேனும் 2013-இன் குற்ற நிலவரம் பற்றிய புள்ளிவிவரத்தைக் கேட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதில்களில் இரண்டு வகையான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
“2013ஆம் ஆண்டுக்கு எப்படி இரண்டு வகை புள்ளிவிவரங்கள் இருக்க முடியும்? இரண்டுக்குமிடையே பெரிய வேறுபாடும் காணப்படுகிறது” என்றாரவர்.
லியுக்கு கொடுக்கப்பட்ட பதிலில் 147,062 குற்றச்செயல்கள் நிகழ்ந்ததாகக் குறிக்கப்பட்டிருந்தது. இஸானிக்குக் கொடுக்கப்பட்ட பதிலில் 99,613 குற்றங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
உள்துறையில் வேலை செய்பவர்கள் எல்லாம் மாரா கல்லூரிகளின் மரத்தாண்டவர்கள்! புள்ளி விவரங்களைக் கிள்ளி எடுத்தாலும் யாருக்கும் புரியப் போவதில்லை!
அட போமா , இது என்ன சின்ன விஷயம், கடந்த 1973ம் ஆண்டு செய்த முறைகேட்டை 2002ம் ஆண்டுதான் கண்டுபிதார்கள் நம்ப தாணைய தலைவர்கள் கே டி என் , கடந்த 2002 முதல் இன்றுவரை 12 ஆண்டுகளாக ஏட்டு சுறகாய் கதைசொல்லிவருகிறது கே டி என்! பாதிக்கபட்டவர்கள் 1200 கும் மேற்பட்ட இந்த நாட்டுக்காக போராடிய காவல் படையினர் ! கம்னியுஸ்ட் தீவர வாதிகளுடன் போராடியவர்கள் ! எங்களுக்கே இந்த கதியென்றால் மக்களுக்கு சொல்லவேண்டுமா ? வெட்கப்படுகிறேன் !