நாட்டின் சுதந்திரன கொண்டாட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வீட்டிற்குள் வெடிகுண்டு வீசப்பட்டது.
இச்சம்பவம் இரவு மணி 11.45 வாக்கில் நடந்தது. எறியப்பட்ட வெடிகுண்டு அவரது வீட்டு வளாகத்தில் விழுந்தது. தீயினால் எரிந்த அடையாளங்கள் சிறிய அளவில் காணப்பட்டன.
இதனிடையே, தொடக்க விசாரனையில் வீட்டு வளாகத்திற்குள் எறியப்பட்ட போத்தலில் மண்ணென்ணெய் நிறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது என்று மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி கூறினார்.
சந்தேகத்திற்குரிய நபர் மோட்டார் சைக்களில் வந்தது சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.
“ஆனால், வீட்டை காவல் புரியும் கடமையிலிருந்த போலீஸ்காரர் வீட்டு வளாகத்தினுள் இருந்ததால், வெளியில் நடந்ததை அவர் காணவில்லை”, என்றார் அப்துல் ரஹிம்.
“உள்ளே எறியப்பட்ட போத்தல் கார் நிறுத்தும் இடத்தில் விழுந்து வெடித்தது”, என்று அவர் மேலும் கூறினார்.
இச்சம்பவம் குறித்து குவான் எங் எதுவும் கூற விரும்பவில்லை என்று அவரது ஊடக உதவியாளர் வோங் கிம் பெய் இரவு மணி 1.40 வாக்கில் கூறினார்.
இப்போதைக்கு இந்த விவகாரத்தை போலீசாரிடமே விட்டு விடுவோம் என்றாரவர்.
இச்சம்பவம் நடந்த போது முதல்வர் லிம் அவரது வீட்டில் துணைவியார் பெட்டி சியு மற்றும் அவர்களது இரு மகன்களுடன் இருந்தார்.
இனி kerja gengster……………………..
BN MIC PERKASA ISMA
இது PPS வேலையாக இருக்குமோ..எது எப்படியோ கம்யுனிஸ்ட் தலைவர் வீடு நாசமானது..
இப்படிதான், ம இ கா ஹோல்டிங்க்ஸ்ல், போட்ட காசை கேட்ட பொழுது, சாமீ வேலு ஆட்களை வைத்து அடிதான், 20 கோடி மக்கள் பணத்தை, 20 ஆண்டு காலம் ஏமாத்தினான், அப்பொழுது எல்லாம் எந்த போலீசும் நடவடிக்கை எடுக்கலையே, சாமீ வேலு மீது ! யார் ஆட்சியில் இது நடந்தது ?
அம்மா சண்டி, பினாங்கு முதலமைச்சரை கம்யூனிஸ்டுகளோடு ஒப்பிட்டு, கம்யூனிஸ்டு தியாகிகளை சிறுமைபடுத்தாதீர்கள். காட்டில் இருந்து கொண்டு கொசுக்கடியிலும், பாம்புக்கடிகளையும் தாங்கிக் கொண்டு நாட்டின் சுதந்திரத்துர்காக வெள்ளையனிடம் போரிட்ட தியாகிகளை தயவு செய்து சிறுமைப்படுத்தாதீர்கள்.
போத்தலுக்குள் எரிஎண்ணையை ஊற்றி அதனை வீசினால் அதுக்குப் பெயர் வெடிகுண்டா..?!
சரிங்க சிங்கம் அவர்களே..தங்கள் கருத்துக்கு தலை வணங்குறேன்
ஆமாம் லிம் இனவாதியை கம்யூனிஸ்டுகளோடு ஒப்பிடகூடாதுதான்.
நன்றிங்க அம்மா shanti அவர்களே! பினாங்கு மாநிலத்திற்கு PPS தேவையே இல்லை . ஏனெனில் , அம்மாநிலத்தை சிங்கப்பூரைப் போன்று கொண்டு வருவேன் என தம்பட்டம் அடித்தவரே இந்த லிம் குவான் எங் தான். சிங்கப்பூரில் PPS போன்ற தொண்டர் படை [மன்னிக்கவும், குண்டர் படை ] இல்லாதபோது, இவருக்கு மட்டும் ஏன் இந்த வீண் ஜம்பம்.
சிங்கம் shanti போன்றோருக்கு எல்லாம்,விளக்கம் கூர அவசியமில்லை ஏனென்றால் அது ஒரு 1/2 வேக்காடு, அதன் கருத்துக்கள் எல்லாம் 3/4 வேக்காடு.சிந்தனைகளை கவனித்தால்,அது ஒரு கிணற்றுத்தவளை.
மூன்றாம் திகதியே இறதி தினம்,அன்வர் காலீட் விசயத்தில் தவறு செய்துவிட்டார் எப்படி அன்று மகாதீர் அன்வர் விசயத்தில் செய்ததுபோல.எம்.பி,பதவி தன் மணைவிக்கு கொடுக்கவேண்டி மக்களின் கணவை எதிர்பார்ப்பை உழைப்பை அழிக்கபோகிறான்.பாஸ்,வும்னோ சேர்ந்தால் மகாதீர் காலத்து ஆட்சியே மீண்டும் அரங்கேறும்.மகாதீர் காலத்தில் பெர்காசா,இஸ்மா /// போன்ற அமைப்பு கிடையாது,இனிவரும் காலத்தில் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போன்ற அமைப்பு உருவாகி அரசாங்கத்தை கைபற்றி நாட்டை ஆலுமோ தெரியாது.நஜிப் வித்தியாசமான பிரதமர்,வந்தவுடன் நம்மையே முதலில் கவணித்தார், பி.என்,அரசு எல்லோறுக்கும் பொது என்பதை நடத்திகாட்டியவர்.ஜே.பி.என்,நம்மை வரவேற்று உதவியது,எங்கு போனாலும் உதவி,சலுகை.உதாரணத்துக்கு பிரிம் உதவி தொகை,ஆனால் நாம் தான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டோம்.இதற்கு நாம் நிச்சயம் வருந்துவோம் ஒரு நாள்,அந்த நாள் வெகுதூரமில்லை.நோர்டின் போன்ற புல்லுறுவிகள் செய்த குழப்பமே நஜிப்பை பெரிதும் பாதித்தது.நஜிப் தோற்றால் வும்னோ அழிந்துவிடும் கருதி சில இயக்கங்கள் க..வோட்டை தயார் செய்து நஜிப்பை ஜெயிக்க வைத்தது.ஆதலால் இன்று நஜிப்பை பதவி நீக்கம் செய்ய பல கோனத்தில் இருந்து தாக்குகின்றனர்.1969(2) பொதுவில் பேனர்,போலீஸ் படை அதிகாரி நீதிமன்ர அவமதிப்பு மற்றும்2.அன்வர் ஹின்ராப்பை அழித்து நம்மை பெற்றான்,இன்று எதற்கோ நம்மை அழித்து எதை பெறபோகிறானோ.பாஸ்,பி.கே.ஆர்,விவகாரம் முற்றிவிட்டது.மாறி மாறி வாய் சண்டை போடுகின்றனர்,அதற்கு பாஸ் அனுமதி கொடுத்துவிட்டது.கெதுவானான் மெலாயு பி.என்னின் கோட்பாடு அல்ல அது பாஸ்ஸின் கோட்பாடு இன்னும் நம்மை அடக்கி வைப்பது பி.என் கோட்பாடல்ல எல்லாம் பாஸ் கோட்பாடுகள்.இந்த நாடு இஸ்லாம் நாடு என்பது பாஸ்ஸின் கோட்பாடு பி.என் கோட்பாடு அல்ல.இரு பெறும் மலாய் சமுக கட்சிகள் ஒன்று சேர்ந்தால் நம் நிலையென்னவாகுமோ,ஊடூட் சட்டம் நிறைவேறுமோ புரூணை போன்று எல்லா இனத்திற்கும்.அன்வர் நடிக்கிறானோ ஊடூட்டுக்கு உதவ,ஊடூட் அங்கீகரிக்கப்பட்டால் 100% அன்வரின் நாடகமே,வாழ்க நாராயண நாமம்.
நன்றிங்க ninja! நாங்கள் ஒரு 1/2, 3/4 வேக்காடு, கிணற்றுத் தவளை என்பதை கண்டு பிடிக்கவே உங்களுக்கு இவ்வளவு காலம் பிடித்ததா? எங்களை விட மோசமான இடத்தில் உள்ளீரே! [சும்மா, தமாஷ்}
சிங்கப்பூரில் நேர்மையான, பாராட்சமற்ற, இனசார்பற்ற போக்குடைய போலிசார் அங்கு குற்றச்செயல்களை மிக2 குறைந்த அளவில் வைத்துள்ளதால் அங்கு PPS போன்ற தன்னார்வ சேவையினர் தேவை இல்லை. அங்கு எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவரின் வீடிற்கு முன்பும் molotov cocktail வீசியவர் தப்பிக்க முடியுமா?!. அங்கு குடிமக்கள் தங்கள் வீட்டின் பின், முன் கதவுகளுக்கு 2, 3 அடுக்கு பூட்டுகள் போடத் தேவை இல்லை. அங்குள்ள நிலைமை இங்குள்ளதற்கு ஒப்புவமைக்கு சிறிதும் ஒவ்வாது. மக்களுக்குப் போதிய அளவில் பொலிசார் பாதுகாப்பு வழங்க முடியா நிலையில் ஒரு மாநில அரசுத் தலைவர் தன அதிகாரத்துக்கு உட்பட்ட முறையில் ஒரு சிறு மாற்றுபாதுகாப்பு முறை அமல் செய்வது என்ன குற்றம்..?! அதற்கு மேல் ஆளும்வர்க்கத்தின் மாமுல் பெறும் இன-மத வெறியர்களின் சகிக்க முடியா சண்டியர்தனம் வேறு. சிங்கையில் இந்த சண்டியர்தனம் நடுக்குமா..?! குவான் எங் மாநில நிலையில் சிறிது முடிந்தவரை இந்த negativesகளை எதிர்கொள்ள உருவாக்கிய PPSஐ ஏன் நாம் ஒருவித குரோத பார்வையுடன், umnob போல், பார்க்கவேண்டும்? மாநில அளவில் சமூக சீர்நிலைஅமலில் அவருக்கு பங்கு இல்லையா?! பங்கு வகிக்கக் கூடாதா? என் பார்வையில் இது அவரின் வீண் ஜம்பம் அன்று. அவரது சமூக நலன் பேணும் ஒரு கடமை மிகு செயல். இதில அங்குள்ள மாநில மக்கள் கருத்துதான் முக்கியம். அது என்னவோ?
மதிப்பிற்குரிய காய் அவர்கள், மனிக்கவும் kayee அவர்கள் சும்மா காடுக்குல்லே இருந்து கோழி கூவ வேண்டாம். கொஞ்சம் வெளியில் வந்து எட்டி பாருகள் . ரொம்ப சிரிப்பா சிரிச்சி பொய் இருக்கு . சரி நீங்கள் ஓரூ கருத்து சொன்னிகள் அல்லவா. அதாவது ‘நோர்டின் போன்ற புல்லுறுவிகள் செய்த குழப்பமே நஜிப்பை பெரிதும் பாதித்தது’ ஏன் முதல்லவர் அவரை shah alam parliment calon ஆகா நியமகினார் . இதுதான் உங்கா முதல்லவர் காட்டும் மரியாதையா .
நாட்டில் சட்டம், ஒழுங்கு கொடி கட்டிப் பறக்கிறது!
தயவு செய்து, மக்கள் சிந்திக்க, குறையோ நிறையோ, உண்மையானதையையும், பொய்மையானதையையும், இரண்டையையும் எழுதுங்கள் ! சிந்தித்து நல்லதை விளக்கி கொள்ள …. அப்படி விளங்கியதில் ஒன்று இங்கே : திரு லிம் அவர்கள் 1.5 ஆண்டும் சிறைவாசம் ஒரு மலாய் கார குடும்பத்துக்காக இருந்தார் ! அவர் நல்ல உள்ளத்திற்கு, இன்னும் பல குறைகளை தாங்கி கொள்ள கடவுள் ஆறுதல் தர வேண்டும் !
நமது போலீஸ் கண்டிப்பாக கண்டு பிடித்து விடுவார்கள் நம்புங்கள் ????????கவலை வேண்டாம்
உங்களுக்கு அசட்டு நம்பிக்கை கூடாது பழனி வேல் சாமீ வேல்
சின்ன பயலே ,,,நம்பிக்கை என்பது நம்ம நஜிபின் தாரக மந்திரம் அததானே பெருசுங்க சொல்லுதுங்க ,,,நம்புங்கள்