என்ஜிஓ: மகாத்மா காந்தியை அடக்கிவைக்க பிரிட்டிஷார் தேச நிந்தனைச் சட்டத்தையே பயன்படுத்தினர்

proபிரிட்டிஷாரிடமிருந்து  விடுதலை பெற்ற  நாளைக்  கொண்டாடிக்  கொண்டிருக்கும்  வேளையில் அரசாங்கம்  காலனிய  காலத்து  தேச  நிந்தனைச்  சட்டத்தை  விடாமல்  பயன்படுத்திக்  கொண்டிருப்பதற்குக்  கண்டனம்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மனித  உரிமைக்காக  போராடும் புரோஹாம்  அமைப்பு,  இந்தியாவில் காலனி  ஆட்சிக்கு  எதிர்ப்புக்  காட்டிய மகாத்மா  காந்தியை  அடக்கி  வைக்க  பிரிட்டன் இந்தச்  சட்டத்தைப்  பயன்படுத்தியது.

“விடுதலைப்  போராட்ட  வீரர்களை  அடக்கிவைக்கவே  காலனிய  அரசாங்கம்  தேச  நிந்தனைச்  சட்டம்  1948-ஐக்  கொண்டுவந்தது  என  புரோஹாம்  கருதுகிறது.

“அப்போதைய  மலாயாவில் இது பரவலாகப்  பயன்படுத்தப்படவில்லை. ஆனால்,  இந்தியாவில்  நிலைமை  வேறு. காந்தியையும்  மற்ற  விடுதலைப்  போராட்டவாதிகளையும்  கைது  செய்யவும்  தடுத்து  வைக்கவும்  இது  அடிக்கடி  பயன்படுத்தப்பட்டது”, என அந்த  என்ஜிஒ  தலைவர்  குத்புல்  ஸாமானும்  தலைமைச்  செயலாளர்  டெனிசன் ஜெயசூரியாவும்  ஒரு  கூட்டறிக்கையில்  கூறியிருந்தனர்.

“சட்டப்பூர்வமாக  கேள்வி  கேட்கும்  குறைசொல்லும்”  அரசியல்வாதிகளை  அடக்கிவைக்க  இச்சட்டத்தைப்  பயன்படுத்தப்படக் கூடாது.  கேள்வி  கேட்பதும்  குறைசொல்வதும்  ஜனநாயகத்தின்  ஒரு பகுதியாகும்  என்றவர்கள்  கூறினர்.