தேச நிந்தனைச் சட்டம் அரசியல்வாதிகளை அடக்கிவைக்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்து பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) நேற்று விடுத்திருந்த அறிக்கை, நடப்பு அரசாங்கமே “மலேசிய வரலாற்றில் மிகவும் சீரற்ற அரசாங்கம்’ என்பதைக் காண்பிக்கிறது என மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் சாடியுள்ளார்.
அந்த அறிக்கையில் யாருடைய கையொப்பமும் இல்லை என்பதே பிரதமர் நஜிப்பின் நிர்வாக இலட்சணத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு. “அங்கே வலது கை செய்வது இடது கைக்குத் தெரியாது”, என்றவர் கூறினார்.
பிஎம்ஓ அறிக்கை, தேச நிந்தனைக் குற்றச்சாட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கூறியிருந்தது. இது “அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை” என்பதைத்தான் காட்டுகிறது என்றாரவர்.
“எந்த நம்பகமான பிரதமரும் ஒருபுறம் ‘மலேசியாவை உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடாக’ உருவாக்கப் போகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு மறுபுறம் எதிரணித் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு அனுமதி அளிக்க மாட்டார். மிக மோசமான ஜனநாயகத்தில்தான் அப்படி நடக்கும்”, என லிம் கூறினார்.
நீதிமன்றத்தில் குற்றம் தாக்கல் செய்வது யார்?? நீதிமன்றமா அல்லது தேசிய சட்டத் தலைவர் அலுவலகமா??? தேசிய சட்ட அலுவலகம் நீதிமன்றத்தின் கீழ் செயல்படுகிறதா அல்லது அரசாங்கத்தின் கீழ் செயல்படுகிறதா?? கையொப்பமில்லா அறிக்கையை வெளியிட்டதே ஒரு அவமதிப்பான காரியம். இதில் தற்காப்பு கருத்து வேறு!!!!