சாபா டிஏபி, சட்டவிரோத குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ) அறிக்கையை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகளுக்கு வாக்குகளுக்காக குடியுரிமைகள் கொடுக்கப்பட்ட கமுக்கமான நடவடிக்கை பற்றி விசாரணை நடத்திய அந்த ஆணையம், அதன் அறிக்கையை மே 12-இல் பேரரசரிடம் ஒப்படைத்தது. ஆனால், அது இன்னமும் பொதுமக்கள் பார்வைக்கு வராமல் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.
“அதை வெளியிட ஏன் தயக்கம்? அரசாங்கம் எதையும் மூடிமறைக்கிறதா?”, என டிஏபி சுதேசி மக்கள் மன்றத் தலைவர் எட்வின் போசி வினவினார்.
ஆர்சிஐ ஆமையின் கழுத்தைப் போன்றது. தேவைப்படும் போது மட்டும் சற்று வெளியே நீட்டி பின்னர் உள்ளே இழுத்துக்கொள்ளும். இப்படி அதனை வேண்டும் வண்ணம் இயக்க அதன் ரீமொட் கண்ட்ரோல் PM அலவலகத்தில் உள்ளது.
ஆர் சி ஐ என்பது ஒரு வெறும் கண்ணாம்மூச்சி விளையாட்டே!!!! ஆவப்போவது ஒன்றுமில்லை மாற்றம் வரும் வரையில்..!!!!!