பினாங்கு தன்னார்வ காவல்படை (பிபிஎஸ்) உறுப்பினர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்டுள்ள கடும் நடவடிக்கை தொடர்கிறது. பிபிஎஸ் தலைவர் பி பூன் போ இன்று (ஆகஸ்ட் 31) கைது செய்யப்பட்டார்.
62 வயதான பி பூன் போ பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான அவர் வாக்குமூலம் அளிப்பதற்கு பினாங்கு மாநில போலீஸ் தலைமையத்திற்கு சென்ற போது அங்கு பிற்பகல் மணி 4.30 அளவில் கைது செய்யப்பட்டார்.
பியுடன் மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் ஆகியோரும் சென்றிருந்தனர்.
பிபிஎஸ் அமைப்பு சங்கங்கள் பதிவகத்தில் (ரோஸ்) பதிவு செய்யப்படாததால் அந்த அமைப்பை சட்ட விரோத அமைப்பாக எடுத்துக் கொண்ட போலீஸ் பிபிஎஸ் உறுப்பினர்களை கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தாங்களாகவே சரணடைய வேண்டும், இல்லையேல் அவர்களது வீடுகளில் அதிரடித் தாக்குதல் நடத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே, நோர்த்-வெஸ்ட் மாவட்ட போலீஸ் தலைவர் மைஓர் பாரிடாலாட்ராஸ் வாஹிட் இதுவரையில் மொத்தம் 156 பிபிஎஸ் உறுப்பினர்கள் சங்கங்கள் சட்டம், செக்சன் 43 இன் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
பினாங்கு முஅதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதையும் அவர் மறுத்தார்.
போலீசாரின் அராஜகம் எல்லை மீறுகிறது. இனத்துவேசம் தலைவிரித்தாடுகிறது. சிறிது காலத்திற்கு முன் கொண்டோலிச ரைஸ் சிங்கப்பூர் வந்திருந்த பொது, ‘anti america’ என்று கூறிக்கொண்டு, oru கூட்டத்தை கூட்டிக் கொண்டு பெரிய ஆர்ப்பாட்டமே செய்தார்,கைரி ஜமாலுதீன். அவரையும் அவரது கூட்டத்தினரையும் ஒன்றுமே செய்ததில்லை இந்த போலீஸ்.
சட்டம் என்ன சொல்கிறது ,எந்த ஒரு இயக்கம் ros சில் பதிவு
செய்ய வேண்டும் என்று . பதிவு செய்ய வில்லையென்றால்
அது சட்ட விரோத இயக்கம் தானே ,படித்தவர்களுக்கும்
அரசியல் வாதிகளுக்கும் சட்டம் தெரிய வில்லை ,போலிஸ்
துறை நடவடிக்கை எடுத்தால் அராஜகமா என்ன அநியாயம்
அய்யா இது ,நல்லது செய்தாலும் முறையாக பதிவு செய்து
இருந்தால் 156 பேர் கதி சிறைக்கு போகும் சூழ்நிலை ஏற்படுமா நைனா.
மா …..தீறனில் சூழ்ச்சியின் ஆரம்ப கட்டம் தொடங்கிவிட்டது ! தேச நிந்தனை ,சட்டவிரோதம் என்றெலாம் சொல்லி கைது வேட்டை எல்லாம் அவன்… கோயா.. வின் கட்டளைக்கு நஜிப் ஆட தொடங்கிவிடார் ! மற்றொரு ஓப்ஸ் லாலாங் 2 ? மெர்டேகா ! மெர்டேக்கா ! மெர்டேக்க !
தலையணை மந்திரம் , தாரக மந்திரம் .ஆளுமையின் இயந்திரம் .
பினாங்கு மாநில அரசு ஜனநாயபடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு.அந்த அரசின் கீழ் தன்னார்வ காவல்படை இயங்குவது எப்படி தப்பாகும்.போலிசுக்கு அந்த படை பதிவு செய்யப்படாததால்தானே பிரச்சனை .அப்படி இருப்பின் உடனே மாநில அரசுக்கு ஆலோசனை கொடுத்து பதிவு செய்து மக்களுக்கு உதவிபுரியும் அந்த படைக்கு போலிஸ் உறுதுணையாக இருக்கலாமே.படையில் தவறு செய்பவர்களை கண்டித்து (தப்பு செய்யும் போலிஸ் மீது நடவடிக்கை எடுப்பதுபோல)தக்க தண்டனை கொடுக்கலாமே.இந்த படையினால் பலர் நன்மை அடைவதை தடுப்பது நியாயமா?
அடா போங்கப்பா !அவர்கள் வச்சா குடிமி ! அடிச்சா மொட்டை நியயம்மாவது ! நீதியாவது சுத்த வெங்காயங்கள் !!!
பதிவு கோரிக்கை நிராகரிக்கபட்டது,மீண்டும் தக்க காரணம் காட்டி பெற முயலவேண்டும்,நாராயண நாராயண.
மாநில அரசு மக்களின் பாதுகாப்புக்கு ஒரு தன்னார்வ குழு ஒன்றை நிறுவது குற்றமா?! பல முறை மனுபோட்டும் அந்த மனுக்களை ஆண்டுகணக்கில் ப்ரீசரில் வைக்கும் ROS-சின் ‘சின்ன நேப்ப்போலியன்’ தன்மை இதற்குக் காரணமாக இருக்கலாம். முறையாகப் பதிவு கேட்டால் முறையாகக் கொடுக்கக என்ன சிரமம்?
காரணமின்றி காரியமில்லை அங்கேயும் ///,திரக்கவேண்டுமே.அது அரசு அங்கீகாரம் பெற்றது.அரசு பி.பி.எஸ்,சை அங்கீகரித்தால் பின் கேடுவருமோ அஞ்சியே தாமதித்து இருக்கலாம்.தொடர்ந்து போராடினால் சரியான காரணம் காட்டினால்,வுனர்தினால் புரிந்து அங்கீகரிக்க வாய்பு வுள்ளது,வாழ்க நாராயண நாமம்.