பினாங்கு தன்னார்வக் காவல் படையைச்(பிபிஎஸ்) சேர்ந்த 156 பேரைக் கைது செய்த போலீசார் அடுத்து தம்மைக் கைது செய்யலாம் என்று நினைக்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்.
“இப்படிக் கேட்கலாம் என்று நினைக்கிறேன். ‘என்னை எப்போது கைது செய்வீர்கள்?’ அவருக்காக (போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார்)க் காத்திருக்கிறேன்”, எனச் செய்தியாளர்களிடம் லிம் கூறினார்.
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்காக பிபிஎஸ் படையினர் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய லிம் இவ்வாறு கூறினார்.
ஐஜிபி-இன் மிரட்டல்களுக்கு மாநில அரசு பணியாது என்றாரவர்.
மேல் இடத்திலிருந்து கண் அசைவு வந்தால் உங்களையும் கைது செய்வார்கள் இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு ? வரிசையாக கைது ஆவதற்கு நோக்கம் என்னவோ ?
தோடா
..தவளை தன் வாயால் கெட்டுவிடும் போலிருக்கு..
தம்பி லிம் குவான் எங்! வீண் சவடால் வேண்டாம். இது 2014. 1984 அல்ல. அப்போதெல்லாம் கட்சித் தலைவர்கள் சிறை சென்றால், தொண்டர்கள் போராட்டம் நடத்துவோம். இப்போ கதையே வேறு. தலைவர் ‘உள்ளே’ போய்விட்டாரா இல்லையா என இணையத்தளங்களை புரட்டிகொண்டிருப்போம். அல்லது காப்பிக் கடையிலே ‘தண்ணி’ போட்டுக்கொண்டு, டி.வி.யில் செய்தி வருகிறதா இல்லையா என பார்த்துக்கொண்டிருப்போம். உங்களை சிறைக்கு அனுப்பி வைக்க ஒரு நாலு பேர் கண்டிப்பாக வருவர். அந்த நாலு பெரும் அடுத்த பொதுத்தேர்தலுக்கு ‘சீட்டு’க்கு அடிபோடுபவர்கள். நீங்கள் ‘உள்ளே’ போனால் எங்களுக்கும் சந்தோசம்தான். உங்களை வைத்து கொஞ்ச காலத்திற்கு நாங்கள் அரசியல் நடத்துவோம்.ஒரு பழைய பாடல்,’சென்று வா மகனே சென்று வா, அறிவை மென்று வா மகனே தின்று வா’
“தோடா..தவளை தன் வாயால் கெட்டுவிடும் போலிருக்கு..” அப்படின்னு இன்னொரு (shanti) தவளை கத்துது !
தல, அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று ஒரு கூட்டம் அதுவும் உங்கள் கட்சி குள்ளயே காத்து கிட்டு இருக்கு.
மக்கள் செலங்கோர் பிரச்சனையை மறப்பதற்கு ….டி எ பி கூத்து இடம் மாறுகிறது …