பினாங்கு தன்னார்வக் காவல் படை(பிபிஎஸ்)-க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல் பாஸின் தன்னார்வப் படையான யுனிட் அமால்-மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பது “நிச்சயம்” என்கிறார் உள்துறை அமைச்சர்.
“போலீஸ் இதேபோன்ற நடவடிக்கையை எடுக்கும். அது உறுதி”, என அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிபிஎஸ்-சுக்கும் யுனிட் அமாலுக்குமிடையிலான வேறுபாடு பற்றி வினவியதற்கு அமைச்சர் இவ்வாறு கூறினார்.
நேற்று பிபிஎஸ் படையினர் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-தான் காரணம் என்றாரவர்.
“நடவடிக்கை எடுக்க முடியுமா என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸுக்குச் சவால் விட்டார். ஐஜிபி நடவடிக்கை எடுத்துள்ளார்”, என்று அஹ்மட் ஜாஹிட் கூறினார்.
திமிர் பேச்சு..
பாஸ் கட்சியின் ‘யூனிட் அமால்’ மீது உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கும் தைரியம் உண்டா? அவருக்கு சவால் விடுகிறேன்!
எடுத்தால் இந்த மமதை மந்திரி பின் மிக வருந்துவார்.
இந்நாடு சட்டமில்லாத நாடாகும் என எண்ணத் தோன்றுகிறது?
காத்திருக்கவும் தேவை இல்லை , ஊற வைக்கவும் தேவை இல்லை. பாஸ் சுடைய யூனிட் அமால் உறுப்பினர்களை உடனே கைதுசெய்து உங்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டும் ! இல்லையேன் பினாங்கில் நடந்தது ஒரு இனவாத, எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒடுக்கும் நடவடிக்கையே ! என்பது உறுதியாகிவிடும் ?
பாஸின் தன்னார்வப் படையான யுனிட் அமால்-மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றே எண்ணுகிறேன். அது குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்ததல்லவா!!!! ஜாஹிட்டின் நேர்மையும் கடைமையும் இதிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம், பினாங்கில் நடந்தது இனவாத நடவடிக்கையா இல்லையா என்று.நிரூபிக்கட்டும்…