பாஸ் தன்னார்வப் படையான யுனிட் அமாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்ஸான் காயாட் சூளுரைத்தார்.
பாஸின் யுனிட் அமால்-மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பது “நிச்சயம்” என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியதற்கு சுஹாய்சான் இவ்வாறு எதிர்வினையாற்றினார்.
யுனிட் அமால் பொதுநலம் பேணும் ஓர் அமைப்பு.
“அப்படி இருக்க யுனிட் அமாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை”, என்றாரவர்.
யானை கொழுத்தால் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுமாம். பாஸ் கட்சியின் ‘யூனிட் அமால்’ மக்களிடையே நன்மதிப்பை பெற்ற இயக்கம். பாஸ் கட்சியின் கூட்டங்களுக்கோ அல்லது நிகழ்சிகளுக்கோ செல்வோர், இந்த பாதுகாப்பு படையினரை பார்க்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி கொள்வர். இப்படிப்பட்ட ஓர் இயக்கத்தை தடை செய்ய என்னும் பாரிசான், தன் சவக்குழியை தானே தோண்டிக் கொள்கிறது. நல்லதுதான்.
அன்பர் சிங்கம் சொல்வது சரி. ஜாஹிட் dap pkr காரர்களை bully செய்வது போல் pas சிடம் விளையாட முடியாது. ஜாஹிட் சொல்வதுபோல் செய்தால் நமக்கு நன்மைதான்..!! umnob pas கூட்டு மேலும் சிறிது காலத்திற்கு கானல் நீராக இருக்கும்.
இரட்டை வேடம் போடும் நமது அமைச்சர்கள் மலாய் காரர்களுக்கு ஒரு நீதியும் மலாய் காரர் அல்லாதாருக்கு ஒரு நீதியும் வழங்கி வருகின்றனர்.நம் நாட்டு சட்டங்கள் அனைத்தும் மலாய் காரர் அல்லாதாருக்கு எதிராக பாய்கிறது.ஒரு துணை அமச்ச்சரை உதைத்த அம்னோ இளைஞர் பிரிவு தலைவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை.இதையே ஒரு மலாய் காரர் அல்லாதவர் ஒரு மலாய் கார துணை அமைச்சருக்கு எதிராகா செய்திருந்தால் பொலிசார் பாய்ந்து பிடித்து குண்டில் ஏற்றி சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.ஆனால் இந்த குற்ற்றத்தை செய்தவர் ஒரு அம்னோ கட்சி இளைன்யற பிரிவு தலைவர் என்பதால் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் கைவிடப்பட்டு விடாது.என்ன அட்புதான ஜனநாயகம்.தெனாலி ராமரே தொடரட்டும் இந்த நல்லாட்சி.
மன்னிக்கும் ஏசுபிரானின் மறு உருவமாய் பெயர்பெற்ற கமலனாதனைப் போல் தொடை நடுங்கி ஜென்மங்கள் இருக்கும்வரை இந்த அவலம் தொடரும்!!!