சிலாங்கூர் மாநில சுல்தான் மாநில மந்திரி புசாராக வான் அஸிஸா வான் இஸ்மயில் நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும், ஏனென்றால் 1992 ஆம் ஆண்டில் அவரது தந்தை, அப்போது சுல்தானாக இருந்தார், கையொப்பமிட்ட ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு இவருக்கு உண்டு.
அரசமைப்பு கோட்பாடுகள் பிரகடனம் என்ற ஆவணத்தில் ஆறு சுல்தான்கள் கையொப்பமிட்டுள்ளனர். அப்பிரகடனப்படி சுல்தான்கள் அரசாங்கத்தின் ஆலோசனையைப் பின்பற்றுவர் என்பதும் ஒப்புக்கொண்டவைகளில் ஒன்றாகும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி இன்று கூறினார்.
இதன்படி, தற்போதைய சுல்தான் மந்திரி புசார் வேட்பாளராக அதிகப்படியான பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்த இயலாமல் “போகலாம்” என்றாரவர்.
“அதன் உள்ளடங்கள் ஆட்சியாளர்களை இன்றுவரையில் கட்டுப்படுத்துகிறது. அது சட்டப்படி அமலாக்கப்படக்கூடியது இல்லை என்றாலும் அதனைப் புறக்கணிப்பது நன்னெறிக்கு முரணானது என்பதால் அது ஆட்சியாளர்களுக்கு தர்மசங்கடமான நிலையை உண்டுபண்ணும்”, என்று அசிஸ் மேலும் கூறினார்.
“ஆகவே, (வான் அஸிசாவை) சுல்தான் நியமித்தாக வேண்டும். அவரை நியகிக்க மறுப்பது ஒரு புறமிருக்க, அதிகப்படியான பெயர்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோருவது 1992 ஆம் ஆண்டு பிரகடனத்திற்கு, முக்கியமாக அரசமைப்புச் சட்டத்திற்கே, முரணானதாகும்”, என்பதை அசிஸ் வலியுறுத்தினார்.
இந்த கிழவன் அம்நோகாரன் பக்கடான் பேசுவான், அதான் அந்த மஞ்ச சட்ட கார………………
அக்கா அசிசா
நடத்துங்கள் உங்கள் நாடகத்தை..அதை பார்ப்பதற்கு நிறைய பேர் காத்திருக்கிறார்கள்.
சிலாங்கூறை பொறுத்தமட்டில் காலீட்டே அரசாங்கம்.காலீட் சொல்கிறார்,இரண்டு பேர்க்கு மேல் கொடுக்காவிடில் தேர்தலை சந்திக்க நேறும் என்று.இது சிலாங்கூர் எம்.பி,காலிட்டின் கோரிக்கை.சுல்தான் எப்போது சொன்னார்,சிலாங்கூரில் தேர்தல் வரவே இவை வுதவும்.சுல்தான் பேரில் அதிர்ப்தி கொள்ளும் அசிஸ் பாரியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை.வாழ்க நாராயண நாமம்.
இது எல்லாம் பாக்காத்தான் தன தலை மீது போட்டுக்கொண்டது. .. அதிகமான துரோகிகள். எல்லாரும் ….
Wan Azizah Anwaar அவர்களே , உங்களுக்கு நாடகத்தில் எதாவது புரியவில்லை என்றால் shanti அவர்களிடம் கற்று கொள்ளுங்கள் ! பணம் குடுப்பவர்கள்ளுக்கு உண்மையாய் எழுதுவார் !
ஞாயிரு தமிழ் மலரை கொஞ்சம் அவசரம் இல்லாமல்
நிதானமாக படித்துவிட்டு; ( சிலாங்கூர் மாநில பெரிய
மந்திரிகளைப் பற்றிய வரலாறு );இவ்வளவு கேவலமான
மனிதர்களுக்காகவா நாம் கண் மூடி; (நல்ல பொழுதை
எல்லாம் )வீணாக, வரி …வரியாக எழுதி; முட்டி மோதிக்
கொண்டிருக்கிறோம் …???
இது தான் தமிழன் பெருமையோ !!!
,அடியே நீ என்ன …
தேர்தலுக்கு பின்னும் இவர்கள் பாடம் படிக்கவில்லை
புலி வருது, புலி வருதுன்னு யாரும் பயம் காட்ட வேண்டாம். சமஸ்தானதிபதிக்கு வேறு வழி இல்லை. யாருக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றதோ அவரையே மந்திரி பெசாராக பதவி ஏற்க அழைக்க வேண்டும் என்பது சட்டம். இதைப் புறக்கணித்து சட்ட மன்றத்தைக் கலைத்துதான் பாருமே. இருந்ததும் போச்சுட நொல்லக்கன்னா என்ற நிலைக்குத் தள்ளப் படுவார். அவ்வாறே தள்ளப் பட்ட முன்னாள் சமஸ்தானதிபதிக்கு மக்களிடையே கிடைத்த மரியாதையை மறந்து விட வேண்டாம்.
தெரிந்து தெளிதல்;அதாவது,அறவழியில் உறுதியானவனாகவும்,பொருள் வகையில் நாணயமானவனாகவும்,இன்பம்தேடி மயங்காதவனாகவும்,தன்னுயிர்க்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த வேண்டும் என்கிறது ஶ்ரீ வல்லுவம் ஆகையால் நாட்டின் சட்டத்திட்டத்தையும் ருக்குன் நெகாரா கோட்பாட்டையும் மதித்து நடக்க விரும்புவோமாக.வாழ்க நாராயண நாமம்.
கலித் இப்பொழுது பல் புடிங்கிய பாம்பு ! ஆகவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே மந்திரி பெசராக வரவேண்டும் மக்கள் கணிப்பும் அதுவே வாழ்க வான் !
அம்நோவிற்கு சட்டம் என்பது ‘சப்பாத்தி’ சுடுவது போல,உடனுக்குடன் மாவைபிளைந்து ,திருப்பித் திருப்பி எப்படிவேணுமானாலும் சுடுவார்கள் .
அய்யா தேனீ, உங்கள் கருத்து , நேப்பாளத்தின் கடைசி மன்னர் ஞானந்திராவை நினைவு படுத்துகிறது!!!
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் தனி தனி சட்டம் மா ?
நல்லகேம் ஒடின்டு இருக்கு இப்பப்போய்,சும்மா இருங்கப்பா என்ன நடக்கின்றது பார்ப்போம்.இன்று 2/9/2014,நாளை இறுதி நாள் 4/9/2014,ஏதோ நடக்கபோகிறது.தீது நடந்து சுல்தான் மீது அலைமோத,விமர்சிக்க,கேம் ஸ்டார்ட், போலீஸ் வேட்டை ஆரம்பமாகும்.ஹின்ராப் பட்ட அத்தனை துயரமும் அன்வாரால்,கூட்டணி அனுபவிக்கும்.வாழ்க நாராயண நாமம்.
நமது சுல்தானுக்கு ready
நீதியும் நேர்மையும் தலை தூக்கட்டும். ஜனநாயகம் மலரட்டும். மக்கள் குரல் ஓங்கட்டும். அரசமைப்பு சட்டம் நிலை நிறுத்தப்படட்டும்…மக்கள் நலமே மகேசன் நலமாய் இருக்கட்டும்…வாழ்க சுல்தான்.!!!!
சட்டமும் நீதியும் என் கையில், மக்களை ஐந்தறிவு கொண்ட மாக்களாய் கருதி இறுமாப்புடன் ஆடிய ஆட்டமே இன்று 3ல் 2ண்டு பங்கை இழந்து மக்களின் அவநம்பிக்கைக்கு ஆளானது பாரிசான். இன்னும் ஜனநாயகத்தை மீறி தேவையற்ற போலிஸ் வேட்டையா??? அமைதி காக்கவேண்டிய போலிஸ் படைக்கு அது தேவையற்ற ஒன்று. நீதியும் நேர்மையும் நிலைத்தாலே அமைதி சுரக்கும் நாடும் நிலைபெறும்.
நம் பெற்றொர் சொத்தை அனாதை ஆஸ்ரமத்துக்கு எழுதி வைத்தால் ஏற்போமா,நாராயண நாராயண.